நேருவுக்கு எதிராக அணிதிரளும் புள்ளிகள்… திகுதிகு திமுக

 

நேருவுக்கு எதிராக அணிதிரளும் புள்ளிகள்… திகுதிகு திமுக

திமுகவில் முதன்மை செயலாளர் கே,என் நேருவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘’ எதற்கெடுத்தாலும் நேருதான் என்றால் நாங்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்களா?’’ என்கிற கொந்தளிப்பு மூத்த நிர்வாகிகள் மத்தியில் நிலவுகிறது. ஐ.பெரியசாமி, பொன்முடியில் தொடங்கி அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை ஒரு பெரிய பட்டாளமே நேரு காலைவார காத்திருக்கிறது.

நேருவுக்கு எதிராக அணிதிரளும் புள்ளிகள்… திகுதிகு திமுக

திமுகவின் முதன்மை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் கட்சி தொடர்பான அத்தனை பஞ்சாயத்துக்களையும் நேருதான் கவனித்து வருகிறார். இதற்காக மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டுவரும் அவர், யாரை தூக்க வேண்டும், யாருக்கு என்ன பதவி தர வேண்டும் என்பதுவரை தலைமைக்கு ஆலோசனை சொல்லி வருகிறார். நேருவின் ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்கப்படுகின்றன. அதேநேரம் மற்ற மூத்த நிர்வாகிகளின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுவதால் நேரு மீதான புகைச்சல் அதிகமாகியிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக மூத்த நிர்வாகி ஒருவர்,
‘’திமுகவில் கருணாநிதி காலத்தில் சீனியர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சீனியர்கள் சொல்வதை பெரும்பாலும் அவர் ஏற்றுக்கொள்வார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. பசையுள்ள பார்ட்டிகளுக்குத்தான் கட்சியில் மதிப்பு கிடைக்கிறது.

நேருவுக்கு எதிராக அணிதிரளும் புள்ளிகள்… திகுதிகு திமுக

இதற்கு நேரு சரியான உதாரணம். நேருவை விட சீனியர்கள் பலர் உள்ள நிலையில் அவரை முதன்மை செயலாளராக்கி, ஓட்டுமொத்த நிர்வாகத்தையும் அவரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். தமிழக அளவில் கட்சிக்குள் எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் நேருதான் அனுப்பிவைக்கப்படுகிறார்.
ஒரு காலத்தில் தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை ஐ.பெரியசாமியைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் இப்போது அவரை சுத்தமாக ஓரம்கட்டிவிட்டார்கள். இதேபோல மூத்த மாவட்ட செயலாளர்கள் பலரும், தங்கள் அதிகாரத்தில் நேரு குறுக்கிடுவதாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

நேருவுக்கு எதிராக அணிதிரளும் புள்ளிகள்… திகுதிகு திமுக

திருச்சியைப் பொறுத்தவரை நேருவுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நேரு தலைமையேற்று நடத்தும் திருச்சி மாநாட்டு பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியை அன்பில் மகேஷ் புறக்கணித்துவிட்டார். இப்படி மாவட்டம் தோறும் நேருவுக்கு எதிர்ப்பாளர்கள் உருவாகி வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கே நேருவை பிடிக்கவில்லை. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விரைவில் நேருவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த இருக்கிறார்கள்’’
என்கிறார்.

நேருவுக்கு எதிராக அணிதிரளும் புள்ளிகள்… திகுதிகு திமுக

இது பற்றி நேரு தரப்பில் விசாரித்தபோது, ‘’ வெட்டிப் பேச்சு அண்ணனுக்கு எப்போதுமே பிடிக்காது. காசை அள்ளியிறைத்து களமிறங்கி கலக்குவதுதான் அவரது ஸ்டைல். இப்படிப்பட்ட ஆட்கள் இப்போது திமுகவில் குறைவு. இதனால்தான் தலைமை நேருவுக்கு முக்கியத்துவம் தருகிறது. இதற்காக மற்றவர்கள் வயிறு எரிந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என்கிறார்கள்.