ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

ஓடாநிலையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தபோது அவர் பேசப் பேச தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
.

ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

வாங்க ஒரு கை பார்ப்போம் என்று மூன்று நாள் பிரச்சாரப் பயணத்திற்காக நேற்று கோவை வந்தார் ராகுல் காந்தி. நேற்றைய தினமே கோவை திருப்பூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்றைக்கு ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் பிரச்சாரம் செய்தபோது, தமிழக மக்களுடன் தனக்கு இருப்பது அரசியல் பிழைப்பு அல்ல; குடும்ப பிணைப்பு என்றார்.

ராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

ராகுல்காந்தியின் பேச்சை மொழிபெயர்த்து வந்தவர் ஒரு பேராசிரியர். இன்று மாலையில் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், ராகுல்காந்தி பேச பேச அவரது பேச்சை அப்படியே தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த பேராசிரியருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சாய்ந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.