Home அரசியல் நிஜமானது ‘முதல்வன்’ சினிமா: ஒரு நாள் முதல்வர் ஆனார் கல்லூரி மாணவி#Uttarakhand #SrishtiGoswami

நிஜமானது ‘முதல்வன்’ சினிமா: ஒரு நாள் முதல்வர் ஆனார் கல்லூரி மாணவி#Uttarakhand #SrishtiGoswami

ஒரு நாள் முதல்வராக இருந்து பார்.. அப்ப தெரியும் உனக்கு.. என்று ரகுவரன் விடுத்த சவாலை ஏற்று ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்கும் அர்ஜூனின் கேரக்டரும், அந்த முதல்வன் சினிமாவும் தமிழகத்தை கலக்கியது. ஒரு நாள் முதல்வர் என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் அது நிஜத்திலும் சாத்தியமாகியிருக்கிறது.

ஒரு கல்லூரி மாணவி இன்று ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். இது அவருக்கு பதவி அல்ல அம்மாணவியின் சாதனைக்காக மேலும் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதாலும் அந்த முயற்சியை இந்த சிறப்பு முயற்சியை அந்த மாணவிக்கு வழங்கியிருக்கிறது உத்தரகாண்ட் மாநில அரசு.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் சிருஷ்டி கோஸ்வாமி கல்லூரியில் இளங்கலை வேளாண்மை படித்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதல்வராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

குழந்தைகளின் மேம்பாட்டுக்காக இவர் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து அசத்தி வருகிறார். அதனால் இவரை ஒரு நாள் முதல்வராக அமர வைத்து அழகு பார்க்க உத்தரகாண்ட் அரசு முடிவெடுத்தது. மேலும் இன்று ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதாலும் அவர்களை கொண்டாடும் வகையில் ஒரு நாள் முதல்வர் என்ற சிறப்பு முயற்சியை சிருஷ்டி கோஸ்வாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தலைநகரில் இன்று மாநில முதல்வராக மாணவி பொறுப்பேற்கிறார். இதுகுறித்து அவர், ’’என்னால் இதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் முடிந்ததை ஆக்கபூர்வமாக செய்வேன். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் என் பணி இருக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சாதனை புரியும் இளையோர்களை கௌரவிக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஒருநாள் கலெக்டர் ஒருநாள் எஸ்பி ஒருநாள் காவல் ஆணையர் போன்ற பதவிகளில் உட்கார வைக்கப்பட்டு மரியாதை செய்வது வழக்கம். ஆனால் ஒரு நாள் முதல்வர் என்று யாரையும் இதுவரை நியமித்தது இல்லை. அந்த கௌரவத்துக்குரிய முதல் மாணவி சிருஷ்டி கோஸ்வாமி தான்.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews