ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி குரு பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாக இருந்து வந்தார். அதனால்தான், ’’நான் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை காடுவெட்டி குரு’ என்று பெருமையாகச் சொல்லுவார் ராமதாஸ்.

நான் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை என்று ராமதாஸ் சொன்னாலும் பெற்றெடுத்த தனது மகன் அன்புமணி அன்புமணியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக கருதி காடுவெட்டி குருவை கொன்றுவிட்டதாக ராமதாஸ் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு காடுவெட்டி ஜெ. குருவின் தாய் மகன், சகோதரி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டில் மே 25ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் குரு காலமானாலும் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் குரு இறந்துவிட்டதாகவும், உரிய சிகிச்சை அளிக்க தாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கு ராமதாஸ் மறுத்துவிட்டார் என்றும் குரு குடும்பத்தினர் அப்போது பகீர் குற்றச்சாட்டு எடுத்து வைத்தனர்.

மூத்த பிள்ளை என்றும், என் தளபதி என்றும் ராமதாசினால் புகழப்பட்ட குரு, மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்திற்கு ராமதாஸ் எதிரியாகி போனார். தொடர்ந்து ராமதாஸ் மீதும் பாமக மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் குருவின் குடும்பத்தினர்.

ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

இந்நிலையில், குருவின் சகோதரி செந்தாமரை, ’’ராமதாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அன்புமணியின் வளர்ச்சிக்கும் தனது வளர்ச்சிக்கும் இடையூறாக இருப்பதாக கருதி மருத்துவமனையில் இருந்த என் அண்ணனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கதையை முடித்துவிட்டார். இதைப்பற்றி பேச முன் வந்த போதெல்லாம், என்னோட ஒரு முகத்தை மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள். இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று என் அண்ணன் மகன் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து ராமதாஸ் மிரட்டினார்’’என்று தெரிவித்துள்ளார்.

கொலை செய்வதற்காகத் தான் ஒரு கட்சி நடத்துகிறார் ராமதாஸ் என்றும், அந்தக் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் வன்னியர் சமுதாயம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கும் செந்தாமரை, வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராடி வரும் ராமதாஸின் போராட்டம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார் செந்தாமரை.

ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

’’தேர்தலில் சீட்டு வேண்டும் என்பதற்காகவும் நோட்டு வேண்டும் என்பதற்காகவும் தான் ராமதாஸ் இட ஒதுக்கீடு பிரச்சனையை கிளப்பி நாடகமாடுகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை இதுதான் இந்த இட ஒதுக்கீடு போராட்டம் ’’என்றும்,

ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

’’ஒரு காலத்தில் பஸ்சுக்கு காசு இல்லாமல் காடுவெட்டிக்கு வந்தவர் ராமதாஸ். அப்போது நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். நான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் காசை எடுத்து அவருக்குக் கொடுத்தேன். அந்த நிலையில் இருந்த ராமதாஸ் இன்றைக்கு பல லட்சம் கோடிக்கு அதிபதி. இவ்வளவு சொத்து எப்படி வந்தது. அது எல்லாமே வன்னியர்களின் சொத்து தான். வன்னியர்களின் பெயரைச்சொல்லி கொள்ளையடித்து சேர்த்த சொத்து தான்’’ என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.