Home அரசியல் பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

பாஜக, தேமுதிக அதிரடி! அதிர்ச்சியில் ஈபிஎஸ்

சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அதிமுகவை அவர் கைப்பற்றி விடுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு தகுந்தமாதிரி அதிமுகவினரும், அதிமுக அமைச்சர்கள் சிலரும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் அவர்களை எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்து இருப்பதாக தகவல்கள் வந்தன.


சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது என்பது நூறு சதவிகிதம் கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக சொல்லியிருக்கிறார். ஆனாலும் தன் பேச்சையும் மீறி சசிகலா விடுதலையாகும் நாளில் அதிமுக நிர்வாகிகளும் அதிமுகவினரும் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள். அவரை வரவேற்க போய்விடுவார்கள் என்று நினைத்துதான் சசிகலா விடுதலை ஆகும் நாளிலேயே அதாவது வரும் 27-ஆம் தேதி அன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைப்பதாக ஏற்பாடு செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள்.

சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் இத்தனை தீவிரமாக இருக்கும்போது, துணை முதல்வர் ஓ. பி. பன்னீர்செல்வமோ, ஆட்சியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி பாதி பங்கு உண்டு என்று தொடர்ந்து பேசி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அமமுகவினர் வேறு டெல்லியில் முகாமிட்டு சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜகவுடன் பேசி வருவதாக தகவல் வருகிறது. அதனல்தான், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளத்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷா மோடியை சந்தித்து பேசியதாகவும் தகவல்.

நிலைமை இப்படி இருக்க அதிமுக கூட்டணியினரோ, சசிகலாவுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறார்கள்.

பிஜேபி மூத்த தலைவர் இல. கணேசன், சசிகலா வரட்டும். அவரால் அதிமுகவுக்கு எந்த துரோகமும் நடக்காது. அவர் துரோகம் செய்யமாட்டார் என்று அடித்துக் கூறுகிறார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஒரு பெண் என்ற முறையில் சசிகலா விடுதலையை வரவேற்கிறேன் என்று கூறியவர், தமிழக அரசியலில் சசிகலா நிச்சயம் பங்குபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கட்சிக்குள் தான் தனக்கு எதிராக பலரும் திரும்பி இருக்கிறார்கள் என்றால் கூட்டணிக் கட்சியினரும் தனக்கு எதிராக திரும்பி இருப்பதால் அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews