அந்த மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி… ஸ்டாலின் ஆவேசம்

 

அந்த மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி… ஸ்டாலின்  ஆவேசம்

காடுகளையும் யானைகளின் வழித்தடங்களையும் அழித்துதான் குடியிருப்புகளூம், சொகுசு விடுதிகளும் அமைக்கப்படுகின்றன. காட்டழித்துதான் விவசாயமும் செய்து வருகிறார்கள். இருக்கும் இடமும், உணவும் குறைந்தால் என்ன செய்யும் காட்டு விலங்குகள். இதனால்தான் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.

அந்த மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி… ஸ்டாலின்  ஆவேசம்

அப்படி உணவு தேடி வரும் விலங்குகளை வெடிவைத்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொன்று வந்தவர்கள் தற்போது ஒரு யானையை தீ வைத்து கொளுத்தி கொன்றிருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ரிசார்ட் பகுதி்யி சென்ற யானையை ரிசார்ட்டில் இருந்தவர்கள் டயரை கொளுத்தி யானை மேல் போட அதில் யானையின் காது மற்றும் முதுகு பகுதி எரிந்ததில் ரத்தம் வெளியேறியது. 40 லிட்டர் ரத்தம் வெளியேறியதால் அந்த யானையால் நடக்க முடியவில்லை. சாலையிலேயே நின்றுகொண்டிருந்த அந்த யானையை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழி்யில் இறந்து போனது.

அந்த மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி… ஸ்டாலின்  ஆவேசம்

இதன்பின்னர் கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், அந்த கொடூர மனிதர்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நடந்த சம்பவத்திற்கு நாடெங்கிலும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது என்கிற மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்

அந்த மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி… ஸ்டாலின்  ஆவேசம்

புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மனிதர்களால் கொல்லப்படாமல் தடுத்து பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்படவும், வன விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படாமலும் தடுத்திடவும் உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இத்தோடு, யானையைத் தீவைத்துக் கொன்றவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமெனவும் கோருகிறேன் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை! சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நீலகிரியில் நடந்திருக்கிறது. இத்தகைய வன்செயல்களில் ஈடுபடும் மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் ஆவேசம் தெரிகிறது.