மதுரை ஆட்சியர் மீது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ புகார்

 

மதுரை ஆட்சியர் மீது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ புகார்

சு.வெங்கடேசன் எம்.பி., மாணிக்க தாகூர் எம்.பி., டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,
விதிகளை மீறி #DISHA கூட்டதை ரத்து செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் மீது விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சு.வெங்கடேசன்.

அவரை நாடாளுமன்ற உரிமைமீறல் குழு விசாரணைக்கு உட்படுத்துவோம் என்றார் மாணிக்கதாகூர். ஆளும் கட்சிக்கு அடிபணியும் ஆட்சியருக்கு கண்டனம் என்று தெரிவித்தார் சரவணன்.

மதுரை ஆட்சியர் மீது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ புகார்

மதுரை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2020 -21 ஆண்டு மூன்றாவது காலாண்டு கூட்டத்தினை மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் 23.1.2021 அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்த DISHA கூட்டத்தினை நிர்வாக காரணமாக நடத்த இயலவில்லை என்பதால், இக்கூட்டத்தின் தேதியினை ரத்தும் செய்தும் மறுகூட்டதேதி பின்பு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் ஆட்சியர்.
அதனால்தான், அரசின் திட்டங்களை எம்.பி. என்ற முறையில் ஆய்வு செய்வதற்கு மதுரை கலெக்டர் தடை போடுகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.