கனிமொழியின் இரவு உணவு… காட்டில் விளைந்த கிழங்குகள்தான்!

 

கனிமொழியின் இரவு உணவு… காட்டில் விளைந்த கிழங்குகள்தான்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்தினை மேற்கொண்டிருந்தார் கனிமொழி எம்.பி.

20ம் தேதி அன்று மீனவர்கள், முந்திரி மற்றும் ரப்பர் ஆலைதொழிலாளர்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாடினார் கனிமொழி.

கனிமொழியின் இரவு உணவு… காட்டில் விளைந்த கிழங்குகள்தான்!

அன்று மாலையில் பேச்சிப்பாறை அடுத்த தச்சலையில் பழங்குடியின மக்களுடன் நடந்த கிராம சபைகூட்டத்தில் பங்கேற்க பேச்சிப்பாறையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தச்சமலைக்கு சென்றார் கனிமொழி.

அவருக்கு அம்மக்கள் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். வனத்தை பாதுகாக்க எங்களைத் தவிர் வேறு யாருக்கும் உணர்வுபூர்வமான எண்ணம் வராது . எங்களுக்கு வனத்துறையில் வேலைகிடைக்க ஏற்பாடு செய்யணும் என்ற மக்களிடம், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நடக்கும் என்று உறுதியளித்தார் கனிமொழி.

கனிமொழியின் இரவு உணவு… காட்டில் விளைந்த கிழங்குகள்தான்!

பின்னர் கனிமொழிக்கு 11 வகையாக காட்டு கிழங்குகளை வேக வைத்து சுடச்சுட வைத்தார்கள். காந்தாரி மொளவு சம்மந்தி, சீனி கிழங்கு, சேன கிழங்கு, காச்சி கிழங்கு, கூவை கிழங்கு என 11 வகை கிழங்குகள், சுடச்சுட கட்டன் தேயிலை என அன்பு மழையில் நனைத்தனர் தச்சமலை மக்கள். கனிமொழியின் அன்றைய இரவு உணவு அதுதான்.

காட்டு கிழங்குகளை சாப்பிட்ட கனிமொழியின் இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் திமுகவினர் வைரலாக்கி வருகின்றனர்.