ராகுல் காந்தி தனித்து பிரச்சாரம் – திமுக கூட்டணியில் இருந்து விலக தயாராகிவிட்டதா காங்கிரஸ் ?

 

ராகுல் காந்தி தனித்து பிரச்சாரம் – திமுக கூட்டணியில் இருந்து விலக தயாராகிவிட்டதா காங்கிரஸ் ?

ராகுல் காந்தி இன்று தனது பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியுள்ளார். தி.மு.க – காங்கிரஸ் இடையே பிளவு சூழல் உள்ள நிலையில் ராகுல் காந்தி தனித்து பிரச்சாரத்தை மேற்கொள்வது, காங்கிரஸ் தனித்து போட்டியிட ஆயுத்தமாகி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

தி.மு.க புதுவையில் தனித்து போட்டியிட திட்டமிட்டு அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை களம் இறக்கியது. தி.மு.கவின் முடிவினால் கொதிப்படைந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தை தன்னுடன் கைக்கோர்க்க அழைத்தது. இதனால் தமிழகத்திலும் தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது ,பட்டவர்த்தனமாக தெரிகிறது .

ராகுல் காந்தி தனித்து பிரச்சாரம் – திமுக கூட்டணியில் இருந்து விலக தயாராகிவிட்டதா காங்கிரஸ் ?

இந்த நிலையில், ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, ராகுலின் பிரச்சார திட்டமும் வெளியிடப்பட்டது. அதில், ராகுல் காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்திப்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டில்லியிலிருந்து தமிழகம் வரும்போது, மாநிலத்தில் தலைமை வகிக்கும் கூட்டணி தலைவர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், தற்போது ராகுல் காந்தி தி.மு.க தலைவரை சந்திப்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதேபோல், டில்லியிலிருந்து கூட்டணி தலைவர்கள் தமிழகம் வரும்போது அவர்களை வரவேற்று கூட்டணி தலைவர்கள் டிவிட்டரில் தகவல் தெரிவிப்பது வழக்கம், ஆனால், ராகுல் காந்தியின் வருகைக்கு ஸ்டாலின் எந்த பதிவும் போடவில்லை. இவை, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்டுள்ள விரிசலையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ஜல்லிக்கல்லி நிகழ்ச்சிக்காக ராகுல் தமிழகம் வந்தபோதும், மு.க.ஸ்டாலினை சந்திக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ராகுல் காந்தி தனித்து பிரச்சாரம் – திமுக கூட்டணியில் இருந்து விலக தயாராகிவிட்டதா காங்கிரஸ் ?

புதுவையில் காங்கிரஸை தி.மு.க கழற்றிவிட திட்டமிட்டது போல், தமிழகத்தில் தி.மு.கவை காங்கிரஸ் கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டே மக்கள் நீதி மய்யத்தை அழைத்துள்ளது காங்கிரஸ் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் மனநிலையில் காங்கிரஸ் தற்போது இருப்பதாகவும், அதன் வெளிப்பாடே ராகுல் காந்தியின் தனித்த பிரச்சாரம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.