திமுகவுடன் ஒரு கை பார்த்துவிட துணிந்துவிட்ட ராகுல்! #VaangaOruKaiPaapom

திமுகவுடன் ஒரு கை பார்த்துவிட  துணிந்துவிட்ட ராகுல்! #VaangaOruKaiPaapom

தமிழகத்தில் காங்கிரஸின் பலம் குறைந்து இருப்பதாக சொல்லி குறைந்த சீட் தருவதாக ஸ்டாலின் சொன்னதால்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி முறுக்கிக்கொண்டு நிற்கிறது. புதுச்சேரி மாநில கூட்டணியிலும் இது எதிரொலிக்கிறது.

திமுகவுடன் ஒரு கை பார்த்துவிட  துணிந்துவிட்ட ராகுல்! #VaangaOruKaiPaapom

இழந்த பலத்தை மீண்டும் கொண்டு வர முடிவெடுத்துவிட்டார் ராகுல்காந்தி. ‘வாங்க, ஒரு கை பார்ப்போம்’ என்று களம் இறங்கிவிட்டார் அவர்.

பொங்கலுக்கு மதுரைக்கு வந்த ராகுல், ஜல்லிக்கட்டை ரசித்ததோடு பொங்கலையும் ருசித்து சென்றார்.

திமுகவுடன் ஒரு கை பார்த்துவிட  துணிந்துவிட்ட ராகுல்! #VaangaOruKaiPaapom

ராகுலின் தமிழ்வணக்கம் இத்தோடு முடியவில்லை. மூன்றுநாள் தற்காலிக சுற்றுப்பயணமாக இன்று கோவை வந்திருக்கும் ராகுல்காந்தி, நாளை மறு தினம் விவசாயிகளுடன் மண் சட்டியிலும் சாப்பிடுகிறார்.

கொடுக்கும் தொகுதிகளுக்கு ஒத்துப்போகவில்லை என்றால், காங்கிரசை கழட்டி விட்டு, பாமகவை கொண்டு வர திமுக முயற்சிப்பதாகவும், அப்படி காங்கிரஸ் கழட்டி விடப்பட்டால் தனித்துதான் போட்டியிட வேண்டும். அதனால்தான், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்து வருகிறார் கே.எஸ்.அழகிரி என்ற பேச்சு எழுந்திருக்கும் நிலையில், ‘வாங்க, ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று திமுகவுக்கு எதிராக காங்கிரசாரை அழைத்துச் செல்கிறார் ராகுல்.

திமுகவுடன் ஒரு கை பார்த்துவிட  துணிந்துவிட்ட ராகுல்! #VaangaOruKaiPaapom

காங்கிரஸ் ஆண்ட இந்த தமிழ் மண்ணை பாஜக ஆள துடிக்கிறது. அதனால், பாஜகவுக்கு எதிராகத்தான், ‘வாங்க, ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று திமுகவுக்கு எதிராக காங்கிரசாரை அழைத்துச் செல்கிறார் ராகுல் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

திமுகவுடன் ஒரு கை பார்த்துவிட  துணிந்துவிட்ட ராகுல்! #VaangaOruKaiPaapom

இன்று,நாளை, நாளை மறுதினம் என மூன்று நாட்களும் ஐந்து மாவட்டங்களில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றி தனது தமிழ் வணக்கத்தை தெரிவிக்க இருக்கிறார். தமிழக மக்களுடன் என் உறவு அரசியல் ஆதாயம் கொண்டது அல்ல! என் மனதிலிருந்து தோன்றும் ரத்தப்பிணைப்புடன் இணைந்த ஓர் உணர்வு என்கிறார் ராகுல் காந்தி.

தமிழ் பண்பாடு காக்க, தமிழகம் மீட்க வாங்க, ஒரு கை பார்ப்போம் என்று ராகுல் சொன்னாலும், இழந்த காங்கிரஸ் பலம் மீட்க, பாஜகவிடம் இருந்து காங்கிரசை காக்க நடக்கும் பிரச்சாரம் என்றே விமர்சனம் எழுந்திருக்கிறது.