100 தொகுதிகள்.. ராமதாஸ் வைத்திருக்கும் லிஸ்ட்!

 

100 தொகுதிகள்.. ராமதாஸ் வைத்திருக்கும் லிஸ்ட்!

வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதூக்கீடு என்பதை அதிமுகவும் ஏற்காது, திமுகவும் ஏற்காது என்பது ராமதசுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் அதையே முன்வைக்கிறார் என்றால் சீட் பேரத்திற்காகத்தான் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் சீட் பேரத்திற்காக ராமதாஸ் இடஒதுக்கீடு நாடகம் நடத்துகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

100 தொகுதிகள்.. ராமதாஸ் வைத்திருக்கும் லிஸ்ட்!

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறது என்ற பேச்சுஎழுந்திருக்கும் நிலையில், திமுகவுடன் அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார் என்ற தகவலும் கசிகிறது. 20 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சம்மதித்தால் திமுகவுடன் கூட்டணி பற்றி ராமதாஸ் முடிவெடுப்பார் என்று பாஜக தலைவர் ஜி.கே. மணி தர்மபுரி மாவட்ட பொதுக்குழுவின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிமுகவுடனும் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது என்றும் சொல்கிறார்கள்.

இதற்கிடையில், இணையவழியாக ராமதாஸ், பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, ’’இட ஒதுக்கீட்டுக்கு ஒரு முடிவு சொல்லாத அதிமுகவுடன் இணைந்து சமுதாய மக்களை சந்திக்க முடியாது. திமுகவுடன் இணைந்தால் ஜெயிக்கலாமே தவிர, அடுத்த ஐந்து வருசத்துல நம்ம கட்சியை காணாமல் போக செய்துவிடுவார்கள். அதனால் திமுகவோடு பாமக சேர்வது ஆபத்துதான் என்றவர்,

100 தொகுதிகள்.. ராமதாஸ் வைத்திருக்கும் லிஸ்ட்!

நமது சமுதாய மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் 100 தொகுதிகள் இருக்குது. அதில் தனித்து போட்டியிட்டால் 10,15 இடங்களிலாவது ஜெயிச்சுடலாம்… என்ன சொல்றீங்க? என்று கேட்டதும் பதறிப்போயிருக்கிறார்கள்.

கூட்டணியில் இருந்தால் வெற்றி உறுதி. ஆனா இது சரிப்பட்டு வருமா? ஏன் இப்படி குழப்புகிறார் ராமதாஸ் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது பாமகவில்.