தமிழ்நாட்டில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார்

 

தமிழ்நாட்டில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார்

தமிழ்நாட்டில் ஒடிடி தளங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் முன்னிலையில் உள்ளது. இது தொடர்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள தகவல்களில் சென்னையின் பொழுதுபோக்கு நுகர்வில் 73 சதவீத பார்வையாளர்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்ச பார்வையாளர்களை கோயம்புத்தூர் கொண்டுள்ளது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மகேஷ் பாபுவின் இவனுக்கு சரியானா ஆள் இல்லை படம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து உங்களுக்காக ஒருவன் படமும் உள்ளது.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆகியவை அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளாக உள்ளன. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இன் 100 வது எபிசோட் அதிகபட்ச பார்வையாளர்களைக் ஈர்த்துள்ளது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் பார்ப்பவர்களில் 40 சதவீதம் பேர் பெண் பார்வையாளர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார்

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் , திரையரங்குகள் செல்வது குறைந்த நிலையில், ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். இதனால் ஓடிடி வெளியீடுகள் அதிகரித்தன. பல முன்னணி திரை நட்சத்திரங்களில் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின.

இது குறித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் கூறுகையில் , “பிராந்திய மொழி உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது,தென்னிந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் சிறிய நகரங்களிலும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு 8 இந்திய மொழிகளில் தினசரி பார்க்கக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள், செய்தி சேனல்களின் லைவ், ஐபிஎல், பிசிசிஐ கிரிக்கெட் தொடர், பிரீமியர் லீக், ஐஎஸ்எல் மற்றும் பி.கே.எல் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்டதாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது.