Home அரசியல் பாஜகவில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில்? கி.வீரமணி

பாஜகவில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில்? கி.வீரமணி

கொலைகாரர்களையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான்! எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும் என்கிறார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

தான் ஏன் இப்படி சொல்கிறார் என்பதற்கான காரணமாக அவர் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார்.

k.veeramani

செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணற்கொள்ளையைத் தடுப்பவர்களைத் தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யாவுக்கு, கோவையில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட மூன்று கொலைகள் உள்பட 5 கொலை வழக்குகளோடு தொடர்பு இருக்கிறது. இந்த சத்யா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் என்றும், சேலத்தில் 5 முறை குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி முரளிக்கு தமிழக பாஜகவில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது என்றும் பட்டியலில் இருக்கிறது.

வடசென்னையைக் கலக்கிய கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். கல்வெட்டு ரவி மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. 6 படுகொலை வழக்குகளில் தொடர்புடையவர் ரவி என்றும், அவருடன் சென்னை சூர்யா என்ற ரவுடியும் பாஜகவில் இணைந்தார். வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலை மீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி விட்டார் என்றும் பட்டியல் தொடர்கிறதது.

புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி புதுச்சேரி பெண் தாதா எழிலரசிதான். ஆனால், சமூக சேவகி என்ற அடையாளத்துடன் வலம் வரும் தாதா எழிலரசி இப்போது பாஜக பிரமுகராகி விட்டார். புதுச்சேரி ரவுடிகளான சோழன், விக்கி, பாம்வேலு ஏற்கெனவே பாஜகவில் இணைந்து பதவிகளைப் பெற்றுள்ளனர்.

K veeramani

திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை மற்றும் மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தக் கட்சியில் சங்கமம் ஆகியுள்ளனர். இதில் ஜெயக்குமார் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டிவந்தவர். இதனால் இவருடைய கிராமத்துக்கு மத்திய அரசின் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது கிடைத்தது. இவரையும் கொலை செய்தனர்.

தஞ்சை ‘பாம்‘ பாலாஜி குரூப்பும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதில் ஸ்பீடு பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர், தஞ்சை பாக்கெட் ராஜா, குடவாசல் சீனு, பல்லு கார்த்திக், பல்லு சீனு, பூண்டு பதன், மெடிக்கல் காலேஜ் வெற்றி, சுரேஷ் என்று அனைவருமே கூலிக்குக் கொலை செய்யும் கும்பல்களாவர். பயங்கர கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள். இவர்களோடு தற்போது சீர்காழி ஆனந்த் உட்பட அனைவருமே பாஜகவில் சங்கமம்.

veeramani

மேற்கண்ட பட்டியலை சொன்னபிறகு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே! தார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளே ஆகும் என்கிறார் வீரமணி.

மாவட்ட செய்திகள்

Most Popular

பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி வெற்றிச்சின்னத்தை காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....

எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தீவிரம்

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியதால் குறைவான தொகுதிகளை பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர்...

வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் இராமமூர்த்தி நாய் என விமர்சித்த ராமதாஸ்

சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இட ஒதுக்கீடு குறித்த ஒரு...

தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 60 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...
TopTamilNews