Home அரசியல் தீர்ப்பு ரெடியான பிறகு ஜெயலலிதா..விடுதலை முடிவான பிறகு சசிகலா.. அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்

தீர்ப்பு ரெடியான பிறகு ஜெயலலிதா..விடுதலை முடிவான பிறகு சசிகலா.. அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்

தீர்ப்பு ரெடியான பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும், விடுதலை முடிவான பிறகு சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் இயற்கையானது என்று சொல்லமுடியவில்லை என்று சந்தேகம் எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

சசிகலா விடுதலயாகி வந்துவிட்டால் அரசியல் சிக்கல்கள் ஏற்படுமென்று அவரை சிறையிலேயே வைத்திருக்க முயற்சிகள் நடக்கின்றன என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்துவிட்டாலும்கூட, சசிகலா விடுதலை அவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்றும் சந்தேகம் வலுத்தது. அதற்கேற்றாபோலவே, ரூபாவின் அறிக்கையும் அது தொடர்பான வழக்கிலும் சசிகலாவுக்கு மேலும் தண்டனை வழங்க வாய்ப்பிருக்கிறது என்றார்கள். இந்த சந்தேகம் எல்லாம்போய் ஒருவழியாக வரும்27ம் தேதி சசிகலா விடுதலையாகிறார் என்ற செய்தி வெளியானது.

பெங்களூரு- ஓசூர்- ஆம்பூர் -ஸ்ரீபெரும்புதூர் வழியாக சசிகலாவை அழைத்து வருவது என்றும், வழிநெடுக பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பது என்றும் அமமுகவினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர். சசிகலா விடுதலை ஆகிறார் என்றால் ஒட்டுமொத்த மீடியாவின் கண்களும் அவர் மீதுதான் இருக்கும். இதனால் தனது செல்வாக்கு சரியுமென்று நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா விடுதலை ஆகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவினை வைத்துவிட்டார் என்கிறார்கள். மேலும், சசிகலா விடுதலையாகி வரும்போது அதிமுகவினர் பெரும்பாலானோர் அவரை வரவேற்க சென்றுவிடுவர் என்ற அச்சத்தில்தான், ஜெ., நினைவிட திறப்பு என்றால் ஒட்டுமொத்த பேரும் அங்கே வந்து குவிந்துவிடுவார்கள் என்று கணக்குபோட்டுதான் 27ல் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவினை வைத்திருக்கிறார் என்றார் ஈபிஎஸ் என்று அழுத்தமாக சொல்கிறார்கள் அமமுகவினர்.

 சசிகலா

ஆனால் தற்போதைய நிலைமையே வேறாக இருக்கிறது. கொரோனா வந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் சசிகலா. கடந்த இரண்டு தினங்களாக மொத்த மீட்யாவும் அவர் செய்திகளைத்தான் தாங்கி நிற்கின்றன.

கொரோனா ஒரு பக்கம் இருக்க, நிமோனியா காய்ச்சலும் கடுமயாக இருக்கிறது சசிகலாவுக்கு. நுரையீரலில் சளி அதிகமாக இருப்பதால் மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ரத்த அழுத்தம், தைராய்டு, நீழிவு பிரச்சனைகளும் இருப்பதால் சசிகலாவின் உடல்நிலை அதிகம் பாதிப்பு உள்ளாகி இருகிகிறது.

கொரோனா மட்டும் உள்ளவர்கள் 15 நாட்களில் குணமடைந்து வந்துவிடலாம். ஆனால், சசிகலாவுக்கு இருக்கும் பிரச்சனைகளை பார்த்தால் 15 நாளில் அவருக்கு சரியாகுமா என்பது கேள்விக்குறிதான். அப்படியே அவர் பதினைந்து நாளில் குணமடைந்தாலும் வீட்டிற்கு வந்தும் 15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளிலேயே பிப்ரவரி மாதம் கடந்துவிடும். அதன்பின்னர்தான் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். அதற்குள் கூட்டணி எல்லாம் இறுதியாகி பிரச்சாரத்திற்கு போய்விடுவார்கள் போலிருக்கிறது. இந்த தேர்தலை விட்டுவிட்டால் அடுத்த தேர்தல் என்பதெல்லாம் சசிகலாவுக்கு சாத்தியமில்லைதான். ஆக மொத்தத்தில் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சிறை செல்வற்கு முன்பாக மூன்று முறை ஜெ., சமாதியில் ஓங்கி அடித்து எடுத்துக்கொண்ட சபதமும் நிறைவேறாமல்தான் போகப்போகிறது என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, வரும் 27ம் தேதியோடு சசிகலாவின் தண்டனைக்காலம் முடிவடைகிறது என்பதால், தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு நாள் கூட சிறை கட்டுப்பாட்டில் இருக்க முடியாது என்பதால், இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கிறது என்பதால், அதற்குள் சசிகலாவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளை செய்து, 27ம் தேதி சிறை நிர்வாகம் அவரை விடுவிடுத்துவிடும் என்கிறார்கள். விடுதலை செய்த பிறகு தற்போது இருக்கும் போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் வாங்கப்பட்டு விடும்.

அதன்பின்னர், சசிகலாவின் சிகிச்சைக்கும், பாதுகாப்புக்கும் கர்நாடக அரசுதான் முன்வரவேண்டும். அம்மாநில பாஜக அரசு இதில் என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை.

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பத்திரங்களில்...

திமுகவுக்கு பயம்… கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்குகிறது: எல். முருகன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். அமமுகவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பாஜக மத்தியஸ்தம்...

பி டீம் யார்? போட்டு உடைத்த கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி வெற்றிச்சின்னத்தை காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....

எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தீவிரம்

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியதால் குறைவான தொகுதிகளை பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர்...
TopTamilNews