Home அரசியல் திமுக சின்னத்தில் விசிக போட்டி என்று அறுதியிட்டு சொல்லவில்லை..திருமாவளவன் மறுப்பு

திமுக சின்னத்தில் விசிக போட்டி என்று அறுதியிட்டு சொல்லவில்லை..திருமாவளவன் மறுப்பு

திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டிடுகிறேன் என்று முதலில் மதிமுக வைகோ ஆரம்பித்தார். அடுத்து விசிக திருமாவளவன் சொன்னார். அப்புறம் ஐஜேகே என்று தொடர்ந்தது. இடையில், தனிச்சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் நிர்பந்திப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தனிச்சின்னத்தில் போட்டியிட நான் நிர்ப்பந்திக்கவில்லை. அது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்று சொன்னார். மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் அதை வழங்கிவிடுவது நல்லது என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறேன் என்று செய்தி வருவதால் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் தெரிவித்தார் ஸ்டாலின்.

thiruma

ஆனாலும், உதயசூரியன் சின்னத்தல் தான் போட்டியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் ’’தேர்தலுக்கு 15 நாட்கள் முன்னர் தனிச்சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதாலும், வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும்,ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தனித்தன்மையை இழக்காது’’ என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்த பதிலுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’பூசிமெழுகுதல் திமுகவுக்கு மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கைவந்த கலை. சொந்த சமூதாய இளைஞர்கள், கட்சி என சுயலாபத்திற்காக காவு கொடுத்த திருமாவளவன் தனித்தன்மை என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’என்று விமர்சித்தார்.

மேலும், ஸ்டாலின் அழுத்தத்தால்தான் திருமாவளவன் தனிச்சின்னம் வேண்டாமென்று அறிவித்துவிட்டார் என செய்திகள் வந்த வண்னம் இருக்க, ‘திமுக சின்னத்தில் விசிக போட்டி’ என்று யாம் அறுதியிட்டு சொல்லவில்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் கூட்டணியின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்தம் சின்னத்தில் போட்டியிட ஆலோசனை வழங்குவதுண்டு. எங்களைப் போன்றோர் அதனைப் பரிசீலிப்பதுண்டு. ஆனால், எமது #தனித்துவமே_முதன்மையானது என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews