திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது என்ற பேச்சு இருக்கும்நிலையில், பாமகதான் இன்னமும் பதில் சொல்லாமல் இருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, திமுகவின் முரசொலி நாளிதழில், அதிமுக என்றால் இனிப்பதேன்? வன்னியர்களூக்கு அப்படி என்ன செய்துவிட்டது அதிமுக? என்று எரிச்சல்பட்டது. மருத்துவரே பதில் சொல்லுங்க… பதிலை எதிர்பார்க்கும் பாட்டாளி சொந்தம் என்று பத்து நாட்களாக ராமதாசை போட்டு படுத்தி எடுத்தார்கள்.

திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

இன்றைய முரசொலியில் அந்த கேள்வியை காணோம். விசாரித்தால், திமுக கூட்டணிக்கு பாமக வரும். ஆனா… என்று ஜி.கே.மணி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

தருமபுரியில் நேற்று பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்ன செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணியிடம், திமுகவுடன் கூட்டணி அமையுமா? துரைமுருகனும் , அன்புமணியும் ஓட்டலில் சந்தித்து கூட்டணி பேசினார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

’’ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகளின் எண்ணமெல்லாம் முழுமுழுக்க இட ஒதுக்கிடு பற்றித்தான் இருக்கிறது. இந்த ஒட ஒதுக்கீடு பிரச்சனை முடிந்த பின்னர்தான் தேர்தலை பற்றியும், கூட்டணியை பற்றியும் ஆலோசிப்போம்’’ என்றவர், ’’29ம் தேதி இறுதிக்கட்ட போராட்டம். அதிலும் அரசு ஒரு தீர்வை சொல்லவில்லை என்றால், ராமதாசே தலைமையேற்று போராடுவார்’’ என்று சொல்லிவிட்டு, ‘’கூட்டணியை விட இட ஒதுக்கீடுதான் பாமகவுக்கு முக்கியம். இது குறித்து தி.மு.க., வாய் திறக்காமல் உள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக முன் வந்தால், கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்’’ என்றார்.

திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடுக்கு திமுக ஓகே சொன்னா கூட்டணிக்கு பாமகவும் ஓகே என்பதாகவே இருந்தது ஜி.கே.மணியின் பேச்சு.