இதுவரைக்கும் அறவழியில் அமைதியாக போராடினோம்; இனிமேல்… எச்சரித்த ஜி.கே.மணி

 

இதுவரைக்கும் அறவழியில் அமைதியாக போராடினோம்; இனிமேல்… எச்சரித்த ஜி.கே.மணி

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 21.1.2021 தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

அப்போது அவர், ’’தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களாக இருக்கின்ற, அடித்தட்டு மக்களாக இருக்கின்ற வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்பது ராமதாசின் 40 ஆண்டுகால போராட்டம். கடந்த டிசம்பர் 1ம் தேதி தொடங்கியது போராட்டம். இதுவரைக்கும் ஐந்து கட்ட போராட்டம் முடிவடைந்திருக்கிறது. 6வது கட்ட போராம்தான் வரும் 29ம் நடக்கிறது. அதுதான் இறுதி போராட்டம். 38 மாவட்டங்களிலும் மக்கள் பெருந்திரள் அறப்போராட்டம் நடைபெறும்.

இதுவரைக்கும் அறவழியில் அமைதியாக போராடினோம்; இனிமேல்… எச்சரித்த ஜி.கே.மணி

ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 ஆயிரம் பேர் கூடுகிறார்கள். தர்மபுரி பாமகவின் கோட்டை என்பதால் இங்கே அதிகம் கூடுவார்கள். இந்த போராட்டம் தொடர்பாகத்தான் பொதுக்குழு நடைபெறுகிறது’’என்றார்.

மேலும், ’’பல்வேறு சமுதாய தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இந்த இட ஒதுக்கீடு போராட்டம் எந்த அரசியல் கட்சிகளூக்கும் எதிரானது அல்ல. எந்த சமுதாயத்திற்கும் எதிரானது அல்ல.

ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகளின் எண்ணமெல்லாம் முழுமுழுக்க இட ஒதுக்கிடு பற்றித்தான் இருக்கிறது. இந்த ஒட ஒதுக்கீடு பிரச்சனை முடிந்த பின்னர்தான் தேர்தலை பற்றியும், கூட்டணியை பற்றியும் ஆலோசிப்போம்’’ என்றார்.

இதுவரைக்கும் அறவழியில் அமைதியாக போராடினோம்; இனிமேல்… எச்சரித்த ஜி.கே.மணி

’’29ம் தேதி இறுதிக்கட்ட போராட்டம். அதிலும் அரசு ஒரு தீர்வை சொல்லவில்லை என்றால், ராமதாசே தலைமையேற்று போராடுவார். இதுவரைக்கும் ரொம்ப அமைதியாக அறவழியில் போராடிக்கொண்டு வருகிறோம். இந்த போராட்டத்திற்கு முடிவு ஏற்படவில்லை என்றால்…. ராமதாஸ் தலைமையேற்று போராடுவார்’’ என்றார்.

இதுவரைக்கும் ரொம்ப அமைதியாக அறவழியில் போராடிக்கொண்டு வருகிறோம். இந்த போராட்டத்திற்கு முடிவு ஏற்படவில்லை என்றால்…. இழுத்த ஜி.கே.மணி, ராமதாஸ் தலைமையேற்று போராடுவார் என்றார். ‘ இதுவரைக்கும் அறவழியில்… ’என்றால் என்ன என்றும், ’ராமதாஸ் தலைமையில் போராடும்போது…? ’என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.