தினகரனை மோடி ஏன் கைவிட்டார்? மதிமாறன்

 

தினகரனை மோடி ஏன் கைவிட்டார்? மதிமாறன்

ஆண்டவரையே மோடி ஆதரவாளராக மாற்றிய பால் தினகரனை மோடி ஏன் கைவிட்டார்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் திமுக பேச்சாளர் மதிமாறன்.

இயேசு அழைக்கிறார்… என்று மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான 28 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினகரனை மோடி ஏன் கைவிட்டார்? மதிமாறன்

தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், கோவை அம்மன்குளம் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பள்ளி நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிக்கு சரியான வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று இரண்டாவது தினமாக தினகரனுக்கு சொந்தமான கல்லூரி, பள்ளி ,அறக்கட்டளை, மருத்துவமனை ,நிறுவனங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் . அத்துடன் அவரது பல்கலைக்கழக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினகரனை மோடி ஏன் கைவிட்டார்? மதிமாறன்

மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், வெளிநாட்டு முதலீடுகள், இந்திய முதலீடுகள் குறித்து பணபரிவர்த்தனை ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கனடாவில் உள்ள பால் தினகரனை இந்தியா வரவழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இந்நிலையில், ‘இயேசு அழைக்கிறார்’- அவரு வருமான வரித்துறையைதான் அழைத்திருக்கிறார். ஆண்டவர் நியாயமாகத்தான் எப்போதும் நடப்பார். ஆனால், 2013 லேயே மோடி வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்து ஆண்டவரையே மோடி ஆதரவாளராக மாற்றிய பால் தினகரனை மோடி ஏன் கைவிட்டார்?”