மனதில் குரல் தொகுப்பு… ஓபிஎஸ் வாழ்த்து

 

மனதில் குரல் தொகுப்பு… ஓபிஎஸ் வாழ்த்து

பிரதமர் நரேந்திரமோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் கடந்த 2014 முதல் 2020 வரை குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த உரையாடல்களின் மொத்த தொகுப்பை குழந்தைகள் உட்பட அனைவரும் எளிதில் காண டிஜிட்டல் முறையில் QR Code பயன்படுத்தி டிஜிட்டல் புத்தகத்தினை பலதரப்பட்ட வல்லுநர்களின் உதவியுடன் வெளியிட்டுள்ளார் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த். (டிஜிட்டல் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய :- http://drrganand.com/publication/ )

மனதில் குரல் தொகுப்பு… ஓபிஎஸ் வாழ்த்து

டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது குழுவுடன்( குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் – என்.சி.பி.சி.ஆர்.) இணைந்து இதை உருவாக்கி இருக்கிறார்.

புதிய இந்தியாவை உருவாக்குவதில் குழந்தைகளின் ஈடுபாட்டிற்கு உத்வேகம் தரும் எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வு சார் வழிகாட்டுதலின் தொகுப்பு இதுவாகும் என்கிறார் ஆனந்த்.

மனதில் குரல் தொகுப்பு… ஓபிஎஸ் வாழ்த்து

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக நிகழ்த்திய குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த உரையாடல்களின் மொத்த தொகுப்பை QR Code பயன்படுத்தி, அழகுற வடிவமைத்த டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.