தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்.. சிதம்பரம் பெருவிழாவில் தீர்மானம்!

 

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்.. சிதம்பரம் பெருவிழாவில் தீர்மானம்!

தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற “வள்ளலார் பெருவிழா”வில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்.. சிதம்பரம் பெருவிழாவில் தீர்மானம்!

சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளாருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் – வள்ளலார் பெருவிழா” – சிதம்பரத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கமும், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவமும் இணைந்து நடத்திய இவ்விழா 20.01.2020 புதன் கிழமை மாலை 5 மணிக்கு சிதம்பரம் வட்டம் கீரப்பாளையம் செல்லியம்மன் கோயில் திடலில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் விழா நிறைவுரையாற்றினார்.

பெருவிழாவில் இரண்டு தீர்மானங்களும் பங்கேற்பாளர்களின் பலத்த கையொலிகளுடன் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்.. சிதம்பரம் பெருவிழாவில் தீர்மானம்!

அதில் முதலாவதாக, வள்ளலார் இராமலிங்க அடிகள் சிந்தனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துக. தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் உரிமை இயக்கங்களும் ஆன்மிகச் சான்றோர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்று, இந்த ஆண்டு முதல் தைப் பூசத் திருநாளை தமிழ்நாடு தழுவிய அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு வள்ளலார் பெருவிழா நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது!

தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது; மெய்யியல் வகையிலும், அறிவியல் முறையிலும் புதிய பரிமாணங்களைத் தொட்டுக் காட்டுவது ஆகும். நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும். அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலார் சிந்தனைகள் அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல துறைகள் சார்ந்து விரிந்து நிற்பதாகும். அதனால்தான், வள்ளலார் அவர்களை தமிழர் மறுமலர்ச்சி மூலவர் என்று அழைக்கிறோம்.

வள்ளலார் சிந்தனைகள் குறித்து ஆழமான – விரிவான ஆய்வுகள் வெளிவந்தால், தமிழினத்தின் பெருமையை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படும். மேலும், உலக சமுதாயத்திற்கும் புதிய வழிகாட்டுதல்களை வழங்குவதாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகள் பெயரில் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்தி, அவரது பன்முகச் சிந்தனைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்தல் வேண்டும் என இப்பெருவிழா தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.