Home அரசியல் ஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி!

ஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி!

அதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தில் சுடச்சுட கொடுத்து வரும் பதிலடிக்கு மக்களிடையே ஆரவாரமான வரவேற்பு கிடைத்து வருகிறது.


திமுக தலைவர் ஸ்டாலின்,மக்கள் கிராம சபை கூட்டம் என்கிற பெயரில் செட்டப் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்துக்கு பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பெண்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் துண்டு சீட்டு மூலம் பதிலளித்து வருகிறார். ஒரு சிறிய கேள்விக்கு கூட ஸ்டாலினால் துண்டு சீட்டு இல்லாமல் பதிலளிக்கவோ அல்லது பேசவோ முடியாது.

இதற்கு ஒரு நல்ல உதாரணம், கோவை, தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் ஒரு பெண் திடீரென எழுந்து ’’திமுகவை முன்னிறுத்தி எதுற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்? இதுவரை திமுக எதையுமே செய்யவில்லை… அப்படி இருக்கும்போது இந்த மாதிரி கிராம சபை கூட்டங்களை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியதும், அதை எதிர்கொள்ள முடியாமல் திணறினார் ஸ்டாலின். பின்னர் தனது கட்சியினரைப் பார்த்து கண்ணசைத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினார்.


தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் மூலம், ஸ்டாலின் நடத்தும் ’செட் அப் கூட்டம்’ மக்களிடையே அம்பலமானது. ’’ஒரு பெண்ணின் கேள்வியைக் கூட எதிர்கொண்டு பதிலளிக்க திறனற்றவராக இருக்கிறாரே ஸ்டாலின்!’’ என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான போது அவருக்கு என்ன தெரியும்…? என்ன திறமை உள்ளது..? என்றெல்லாம் கேள்விஎழுப்பினார் ஸ்டாலின். ஆனால் முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அசால்டாக லெஃப்ட் கையால் டீல் செய்து, மள மளவென தனது அரசியல் ஆளுமையை மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் நிரூபித்துக் காட்டி, டாப் கியரில் உச்சத்துக்குச் சென்று விட்டார் எடப்பாடி.
எந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியானாலும், தேர்தல் பிரசாரம் என்றாலும், ஸ்டாலினைப் போன்று துண்டு சீட்டு எதுவும் இல்லாமல், மணிக் கணக்கில் உரையாற்றி, மக்களைக் கவர்கிறார் எடப்பாடி. இப்படித்தான் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அவர் புதன்கிழமையன்று மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவையும், மு.க. ஸ்டாலினையும் பொளந்து கட்டி விட்டார். அதிலும் குறிப்பாக ’’அ.தி.மு.க.ஆட்சியில் ஊழல் என்று ஸ்டாலின் சொல்கிறார். எந்த இடத்திற்கும் வாருங்கள். ஆனால், துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும். யாராவது எழுதிக் கொடுத்ததை படிக்கக்கூடாது. எந்தத் துறையில் என்னென்ன தவறு என்று சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்’’ என்ற எடப்பாடியின் பேச்சுக்கு கைதட்டியும் விசில் அடித்தும் மக்களிடையே ஏக ரெஸ்பான்ஸ்.

’’திமுக ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது, எப்போதும் மின்வெட்டுதான்’’ என்று திமுகவின் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சியில் தமிழகம் மின்வெட்டினால் இருளில் மூழ்கி கிடந்ததை நினைவூட்டிப் பேசியதையும் மக்கள் ஆமோதித்து கைதட்டினர். ஸ்ரீபெரும்புதூரில் பேசுகையில்’’அதிமுகவில் மட்டும் தான் ஒரு தொண்டன் கூட முதல்வராக முடியும். திமுகவில் அப்படி கிடையாது; கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின்தான் முதல்வராக நினைக்கிறார். ஆனால் அவரால் வர முடியாது; அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்’’ என திமுகவின் வாரிசு அரசியலையும் ஒரு பிடி பிடித்தார் எடப்பாடி.
’’ஜனவரி 27 க்குப் பிறகு என் ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் அதன்பிறகும் என் ஆட்சி இருக்கும். ஆனால் மு.க. அழகிரி கட்சி துவங்கினால் கண்டிப்பாக திமுக உடையும். அப்போது ஸ்டாலினும், திமுகவும் காணாமல் போவார்கள்” என்று போட்டு தாக்கிய எடப்பாடியின் பேச்சுக்கு மக்களிடையே கிளாப்ஸ் அள்ளியது. ஆக மொத்தத்தில் எளிய கிராமத்து நடையில் அதேநேரம் கருத்துச் செறிவோடு எடப்பாடி ஆற்றும் உரைகள் மக்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன என தாராளமாக சொல்லலாம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஆதரவாளர்களுக்கு சீட் வேணும்” : ஆட்டம் காணும் இரட்டை தலைமை!

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல்; அதிமுக பரபரப்பு

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும் வேட்பாளர்களை...

‘உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது’ – டிடிவி தினகரன் சூசகம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் அதிமுக, திமுக அதிரடியாக களமிறங்கியுள்ளன. திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டுமென பாஜகவுடன் கைகோர்த்து அதிமுக களமிறங்கியிருக்கும் நிலையில், அதிமுகவையும் சேர்த்து ஒழித்துக் கட்ட அமமுக...

காங்கிரஸ் என்னிடம் கூட்டணி பேசியது உண்மை: இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?கமல்

திமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் ஏற்பட்டதால் அதிருப்தியில் இருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகள் தங்கள் பக்கம் வந்துவிடும் என்பது மாதிரியே பேசி வந்தார் கமல்ஹாசன்....
TopTamilNews