திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

 

திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

திமுக எடுத்த அஸ்திரத்தால் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தட்டுத்தடுமாறுகிறது காங்கிரஸ் என்றும், கூட்டணியில் இருந்தாலும் சுயமாக சில முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் தற்போது திமுகவை மீறி எந்த செயலையும் செய்ய தயங்குகிறது என்றும் பேச்சு எழ, காரணமாக அமைந்திருக்கிறது கே.எஸ்.அழகிரியின் செயல்பாடு.

எடுத்த முடிவில் உறுதியாக இல்லாமல் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று தடுமாறுவதால்தான் இந்த பேச்சு எழுந்திருக்கிறது.

திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிறது என்றும், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியான நிலையில் அதன்பிறகு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது அந்த பேச்சு. திடீரென்று நேற்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘’மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை எங்கள் கூட்டணிக்கு வரவேற்கிறோம். மிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் கமல்ஹாசன் சேர வேண்டும். கமல்ஹாசன் பிரிந்து நின்றால் அது ஓட்டுகளைச் சிதறடிக்கும்’’என்றார்.

120 தொகுகுதிகளில் வெற்றி உறுதி என்று ஓடிக்கொண்டிருக்கும் திமுக, ஏன் கமல்ஹாசனால் ஓட்டு சிதறுவது பற்றி கவலைப்பட வேண்டும் என்ற பேச்சு எழுந்தாலும், ஸ்டாலினின் சம்மதம் இல்லாமல் கே.எஸ்.அழகிரி கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்க வாய்ப்பில்லை. பாமகவுக்கு வலைவீசி அதிருப்தியில் இருக்கும் ஸ்டாலின், கமலுக்கும் வலை வீசி பார்க்கிறார் போலிருக்கிறது என்ற பரபரப்பு எழுந்தது.

திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி முறுக்கிக்கொண்டு நிற்கும் நிலையில், பேச்சுவார்த்தையில் அது சரி செய்யப்படும். அப்படி சரி செய்ய முடியவில்லை என்றால் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும் கே.எஸ்.அழகிரி சொல்லி இருந்தார். புதுச்சேரியில் திடீரென்று திமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் களமிறக்கப்பட்டிருப்பதால் நாராயணாமி தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிறார். கிரண்பேடியோடு போராடிக்கொண்டிருக்கையில் இதல இது வேறயா? என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்த சில முரண்பாடுகளால்தான் புதுச்சேரியில் திமுக அந்த அஸ்திரத்தை எடுத்திருக்கிறது என்கிறார்கள். புதுச்சேரியில் ஏற்பட்ட நிலைமை தமிழகத்திலும் நேர்ந்தால், அதாவது காங்கிரஸ் வேண்டாம் என்ற நிலைக்கு திமுக வந்துவிட்டால் என்னாவது? என்ற கலக்கம் ஒரு பக்கம் இருக்கையில், கூட்டணிக்கு வலு சேர்க்கிறேன் என்று கமல்ஹாசனை நேற்று அழைத்த கே.எஸ்.அழகிரி, இன்றைக்கு பின் வாங்கி இருக்கிறார்.

திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சிக்கவில்லை. ஆனால் அவரை வரவேற்கிறோம். கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டு வங்கி பாதிக்கப்படாது என்றுதான் கமல்ஹாசனை வரவேற்கிறோம் என்கிறார்.

கே.எஸ்.அழகிரியின் நேற்றைய பேச்சை வைத்து, திமுக கூட்டணிக்கு கமல்ஹாசனை அழைக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இன்று கொஞ்சம் மாற்றி பேசுகிறார்.

திமுகவின் சம்மதம் இல்லாமல் இவராக இப்படி ஒரு முடிவெடுத்து பேசியிருக்கிறரா? அதனால்தான் ஜகா வாங்குகிறாரா? என்ற கேள்வி எழாமல் இருக்குமா என்ன?