சசிகலாவை சந்திக்க விடவில்லை; சிகிச்சையிலும் மெத்தனம்… உறவினர்கள் குற்றச்சாட்டு

சசிகலாவை சந்திக்க விடவில்லை; சிகிச்சையிலும் மெத்தனம்…  உறவினர்கள் குற்றச்சாட்டு

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சசிகலா அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சசிகலாவின் உறவினர்கள் விவேக், ஜெயானந்த், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமைக்கு விரைந்தனர். ஆனாலும் அவர்களை சசிகலாவை சந்திக்க சிறைத்துறை மறுத்திருக்கிறது. மேலும், சசிகலாவின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வழங்கவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை சந்திக்க விடவில்லை; சிகிச்சையிலும் மெத்தனம்…  உறவினர்கள் குற்றச்சாட்டு

நடைமுறையை காரணம் காட்டியே சிறை நிர்வாகமும், மருத்துவமனையும் காலம் கடத்துகிறது என்றும், சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ள நிலையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் குற்றம் சாட்டுகிறார்.

சசிகலாவை சந்திக்க விடவில்லை; சிகிச்சையிலும் மெத்தனம்…  உறவினர்கள் குற்றச்சாட்டு

நேற்று மாலை மூச்சுத் திணறுவது ஏற்பட்ட பிறகுதான் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது என்கிறார்கள். முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது என்கிறார்கள்.

சசிகலாவை சந்திக்க விடவில்லை; சிகிச்சையிலும் மெத்தனம்…  உறவினர்கள் குற்றச்சாட்டு

சிறையில் இருந்து சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் அவருக்கு சிகிச்சையை தாமதப்படுத்துகின்றனர். சிறையிலிருந்த சசிகலாவிற்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் ஜெயானந்த்.

அவருக்கு சாதாரண எக்ஸ்ரே மட்டும் எடுத்து பார்த்திருக்கிறார்கள். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தால்தான் உடல்நிலை குறித்து தெரியவரும். அந்த சி.டி. ஸ்கேன் எடுக்க அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அதற்கு கோர்ட் அனுமதி வழங்க வேண்டும். சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும் என்கிறார் ஜெயானந்த்.