சசிகலாவுக்கு கொரோனாவா? சோதனை முடிவுகள் சொல்வது என்ன?

 

சசிகலாவுக்கு கொரோனாவா? சோதனை முடிவுகள் சொல்வது என்ன?

சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது.

சசிகலாவுக்கு கொரோனாவா? சோதனை முடிவுகள் சொல்வது என்ன?

முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாகவே சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வந்துள்ளது. நேற்று அதிகமாகவே மருத்துவர்கள் வந்து கவனித்துள்ளனர். அதிலும் சரியாகாமல் போகவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால் முதலில் அவருக்கு ரேபிட் சோதனை நடந்தது. அதில் கொரோனா இல்லை என்று தெரியவந்ததும், அடுத்து ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.

மூச்சுத்திணறல் அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.