சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் – மருத்துவர்கள் கண்காணிப்பு

 

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் – மருத்துவர்கள் கண்காணிப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், தற்போது பெரிதும் கவலைப்படும்படியாக ஏதும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் – மருத்துவர்கள் கண்காணிப்பு

மருத்துவர்கள் தொடர்ந்து சசிகலாவின் உடல்நிலையை கவனித்து வருவதாக சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.

வரும் 27ம்தேதி அவர் சசிகலா விடுதலை ஆகும் நிலையில் இந்த செய்தி அமமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்தது. அதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் பட்டது. தீர்ப்பு வரும் நாளில் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.

சசிகலா இளவரசி உள்ளிட்ட மூவர் நான்காண்டு தண்டனை அனுபவித்து இம்மாதம் 27ஆம் தேதி வெளியே வருகிறார்கள்.

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் – மருத்துவர்கள் கண்காணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதே பகுதியில் அவருக்கான நினைவிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது. அந்தப் பணிகள் முடிவடைந்து இம்மாதம் 27ம் தேதி அந்த நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது. சசிகலா விடுதலை செய்யப்படும் அதே தினத்திலேயே ஜெ,வின் நினைவிட திறப்பு விழாவும் நடக்கிறது.

இந்நிலையில், சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் அமமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.