தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்!

 

தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்!

இத்தனை காலமும் புதுச்சேரியில் கிரண்பேடியோடு போராடி வரும் முதல்வர் நாராயணசாமிக்கு இப்போது புதிய தலைவலியாக வந்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்!

புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளர் என்று ஜெகத்ரட்சகனை களமிறக்கி இருக்கிறார் ஸ்டாலின். இதனால் கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி காங்கிரஸ் அதிர்ந்து நிற்கிறது.

கிரண்பேடிக்கு எதிராக சாலை போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி, இந்த தாக்குதலையும் தாக்குப்பிடித்து வருகிறார்.

தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்!

இந்நிலையில் தமிழக காங்கிர தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, கூட்டணி குழப்பம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘’திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கோள்வோம். இது தொடர்பாக மேலும் சொல்ல வேண்டும் என்றால் அதை அம்மாநில தலைவர்கள்தான் சொல்ல வேண்டும்’’ என்றவரிடம்,

தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்!

பேசி தீர்த்துக்கொள்வோம் என்கிறீர்கள்… பேச்சில் உடன்பாடு எட்டாவிட்டால்..? என்று கேட்டபோது, அப்படி ஒருவேளை உடன்பாடு எட்டாமல் போனால் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். அதில் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றார்.

நாராயணசாமியின் போராட்டங்களிலும் திமுக பங்கேற்கவில்லை. 30 தொகுதிகளில் திமுக வெற்றிபெறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று ஜெகத்ரட்சகனும் சவால் விட்டிருக்கிறார். இப்போது கே.எஸ்.அழகிரி சொல்வதையும் வைத்து பார்த்தால் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது.