அழகிரி மூலமாக ஸ்டாலின் விரிக்கும் வலை… சிக்குவாரா கமல்?

 

அழகிரி மூலமாக ஸ்டாலின் விரிக்கும்  வலை… சிக்குவாரா கமல்?

திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிறது என்றும், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்றே எதிர்பார்த்திருந்தார் கமல்.

அழகிரி மூலமாக ஸ்டாலின் விரிக்கும்  வலை… சிக்குவாரா கமல்?

கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த பின்னரும்கூட, அவரிடம் ஆதரவு கேட்கலாம் என்று கமல் முயற்சித்து வந்தார். அதுவும் நடக்காத நிலையில் தீவிர பிரச்சாரத்தில் இருந்தவர் தற்போது ஒருமாத ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘’மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை எங்கள் கூட்டணிக்கு வரவேற்கிறோம். மிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் கமல்ஹாசன் சேர வேண்டும்’’ என்றார்.

அழகிரி மூலமாக ஸ்டாலின் விரிக்கும்  வலை… சிக்குவாரா கமல்?

மேலும், ’’கமல்ஹாசன் பிரிந்து நின்றால் அது ஓட்டுகளைச் சிதறடிக்கும்’’என்றார்.

ஸ்டாலினின் சம்மதம் இல்லாமல் கே.எஸ்.அழகிரி கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்க வாய்ப்பில்லை. பாமகவுக்கு வலைவீசி அதிருப்தியில் இருக்கும் ஸ்டாலின், கமலுக்கும் வலை வீசி பார்க்கிறார்.

அதிமுகவை மட்டுமே வச்சி வெளுத்து வாங்குவதை பார்த்தால் கமலும் இந்த வலையில் சிக்குவார் என்றே பேச்சு எழுந்திருக்கிறது.