’தனிச்சின்னம்’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்

 

’தனிச்சின்னம்’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்

கேட்கும் இடங்களையும் கொடுக்காமல், தனிச்சின்னத்திலும் போட்டியிட ஸ்டாலின் அனுமதிக்காததால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் மீண்டும் மக்கள் நல கூட்டணி உருவாக இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. மேலும், காங்கிரசை திமுக கழற்றிவிட பார்ப்பதால் அக்கட்சியும் ம.ந.கூட்டணியில் சேர வாய்ப்பிருப்பதாக செய்திகள் வந்த நிலையில், கூட்டணிக் கட்சியினரை தான் நிர்பந்திக்கவில்லை என்றும், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட சதி நடக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

’தனிச்சின்னம்’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்

அதாவது, மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் அதை வழங்கிவிடுவது நல்லது என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறேன் என்று செய்தி வருவதால் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் உருவான மக்கள் நல கூட்டணி இப்போது இல்லை. அக்கூட்டணியில் முன்னெடுத்து சென்றவர் வைகோ. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இக்கூட்டணி மாற்று அரசியலுக்கான முயற்சி என்று பேசப்பட்டாலும் கூட, தேர்தலில் படு தோல்வியை தழுவியது. அதன்பிறகு திமுகவுக்குத்தான் தனது முழு ஆதரவு என்று சொல்லிவருகிறார் வைகோ.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் ஸ்டாலினை தனியாக சந்தித்து 20 சீட் வரைக்கும் வைகோ கேட்டதாகவும், ஸ்டாலினும் ‘பார்க்கலாம்’ என்று சொன்னதால்தான் வைகோவும் புதுத்தெம்போடு, ம.ந.கூ. இத்தேர்தலில் அமையுமா? என்ற கேட்டபோது, மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றார்.
ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் மீண்டும் ம.ந.கூ. அமைப்பதுதான் சரிப்பட்டு வரும் என்றே யோசிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

’தனிச்சின்னம்’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்

மதிமுக, விசிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு அதிக சீட் கேட்டு எதிர்ப்பார்த்திருப்பது ஒருபக்கம் இருக்க, இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் என்று தெரிவித்துள்ளன. ஆனால், தனிச்சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் தடை போட்டிருப்பதாக தகவல் வெளியானது.

மேலும், 20 சீட், 16 சீட் என்ற நம்பிக்கையில் இருக்கும் வைகோவுக்கு 5தான் என்ற தகவல் வந்திருக்கிறதாம் என்றும், இதே போல்தான் கம்யூனிஸ்டுகள், விசிக மற்ற கட்சிகளின் நிலைமையும் என்றும் திமுக சீனியர்கள் சிலரின் தரப்பில் இருந்து தகவல் வந்தது.

’தனிச்சின்னம்’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்

கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் எதிர்பாப்பு நிறைவேறும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதிலும் இதேதான் கதி என்றால் மக்கள் நல கூட்டணி மீண்டும் உதயமாவது உறுதி என்றும், 25க்கு மேல் எதிர்பாத்திருந்த காங்கிரசுக்கு வெறும் 11தான் என்று திமுக முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட காங்கிரசும் அதிருப்தியில் இருக்கிறது என்றும், , கூடுதல் பலமாக காங்கிரஸும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறது என்ற பரபரப்பு பேச்சு எழுந்த நிலையில், திமுகவில் பெரும் சலசலப்பு எழுந்தது.

இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், இன்று மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் அதை வழங்கிவிடுவது நல்லது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறேன் என்பது எல்லாம் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றே நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.