துணிச்சல் தினம்… ஓராண்டு கொண்டாட மோடி திட்டம்

 

துணிச்சல்  தினம்… ஓராண்டு கொண்டாட மோடி திட்டம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் 23ம் தேதி அன்று நடைபெறுகிறது. நேதாஜியின் பிறந்த நாளை ‘துணிச்சல் தினம்’ ஆக பாஜக கொண்டாடவிருக்கிறது. மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். தனதுடுவிட்டர் பக்கத்திலும் இதை தெரிவித்திருக்கிறார்.

துணிச்சல்  தினம்… ஓராண்டு கொண்டாட மோடி திட்டம்

அவர் மேலும், 23.1.2021ல் கொல்கத்தாவில் துணிச்சல் கொண்டாடப்படுகிறது என்றும், பிரதமர் நரேந்திரமோடி இதில் பங்கேற்று தேசிய நூலக மைதானத்தில் இருக்கும் கண்காட்சியை திறந்து வைக்கிறார் என்றும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பிரதமர் கவுரவப்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், நேதாஜியின் 125வது பிறந்த நாளை வரும் 23ம் தேதி மட்டும் கொண்டாடுவதோடு அல்லாமல், ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

நேதாஜியின் பிறந்த தினம் துணிச்சல் தினமாக கொண்டாடவிருப்பதால், பராக்கிரம் திவாஸ்(துணிச்சல் தினம்) #ParakramDiwas என்ற ஹேஷ்டேக்கினையும் பாஜகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.