முதல்வரின் டெல்லி பயணத்தில் நினைத்தது நடந்ததாமே – உற்சாகத்தில் அதிமுகவினர்!

 

முதல்வரின் டெல்லி பயணத்தில் நினைத்தது நடந்ததாமே – உற்சாகத்தில் அதிமுகவினர்!

தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட் சூப்பர் சக்சஸ் என்றும், ஆளுமை மிக்க அவர் சாதித்துக் காட்டி விட்டார் என்றும் அதிமுகவினர் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். அதிமுகவினரை இந்த அளவுக்கு உற்சாகம் அடைய வைத்த விஷயம் என்ன என்று விசாரித்தால், சுமுகமாக முடிந்த தொகுதி பங்கீடுதான் என்று காதைக் கடிக்கின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

முதல்வரின் டெல்லி பயணத்தில் நினைத்தது நடந்ததாமே – உற்சாகத்தில் அதிமுகவினர்!
புதுடெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்லி விமான நிலையத்தில் புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் என்.சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, நவநீதகிருஷ்ணன், ஏ.முகமது ஜான், என்.சந்திரசேகரன் ஆகியோர் மலர்கொத்து அளித்து வரவேற்ற காட்சி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பேசிவிட்டு, அடுத்ததாக தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

அப்போது, அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவதை உறுதி செய்து ஏற்கெனவே தாமும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் சென்னையில் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக மற்றும் இதர கட்சிகள் இடம்பெறுவதை தாங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் டெல்லி பயணத்தில் நினைத்தது நடந்ததாமே – உற்சாகத்தில் அதிமுகவினர்!

அதே சமயம் இந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 170 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட விரும்புவதாக எடப்பாடி அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.மீதமுள்ள தொகுதிகளை, அதாவது சுமார் 60 தொகுதிகளை உங்களிடமே கொடுத்து விடுகிறோம். அவற்றிலிருந்து நீங்களும் எடுத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள். நீங்களே பிரித்துக் கொடுக்கும்போது அதை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளும். எங்களிடம் என்றால் அதிக தொகுதிகளை டிமாண்ட் செய்வார்கள். அதிமுக 170 இடங்களில் போட்டியிட்டால்தான் திமுகவை தேர்தலில் மண்ணை கவ்வ வைக்க முடியும் என்று கூறி, தமிழக அரசியல் களத்தின் சில எதார்த்த நிலவரங்களையும், அது தொடர்பாக தாம் திரட்டிய தகவல்கள் அடங்கிய பைலையும் அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார்.

முதல்வரின் டெல்லி பயணத்தில் நினைத்தது நடந்ததாமே – உற்சாகத்தில் அதிமுகவினர்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, அது தொடர்பான சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்ட அமித்ஷா, எடப்பாடியின் டீலுக்கு ஓ.கே. சொன்னதாக தெரிகிறது. மேலும் சசிகலா, சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதால், அவரை கட்சியில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது; அதில் தமக்கோ கட்சியினருக்கோ விருப்பமில்லை என்பதையும் எடப்பாடியார் உறுதியாக தெரிவித்துள்ளார். அதற்கும் அமித்ஷாவிடமிருந்து சாதகமான சமிக்ஞை வந்ததாக தெரிகிறது.

இதையடுத்தே அடுத்த நாள் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்,அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்று உறுதியாக கூறி, அவர் தொடர்பான சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். மொத்தத்தில் எடப்பாடியின் டெல்லி விசிட்டுக்கு கிடைத்துள்ள வெற்றியை,வரவிருக்கும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவே அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்.