சாம்சங் நிறுவன துணை தலைவர் மீண்டும் சிறையிலடைப்பு

 

சாம்சங் நிறுவன துணை தலைவர் மீண்டும் சிறையிலடைப்பு

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் துணைத்தலைவர் லீ ஜெய் யங் இவர் ஊழல் வழக்கில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி பார்க் குன் ஹைக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் 2017ம் ஆண்டில் இவருக்கு 5 அண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சாம்சங் நிறுவன துணை தலைவர் மீண்டும் சிறையிலடைப்பு

இந்த தண்டையை எதிர்த்து லீ மேல்முறையீடு செய்தார். அதில் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. ஆகவே, ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் லீ விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு சியோல் உயர்நீதிமன்றத்திற்கு மாறியது. அங்கு நடந்து வந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சாம்சங்கின் தலைவராக இருந்த லீயின் தந்தை கடந்த அக்டோபரில் மாரடைப்பால் மரணம் அடைந்த பின்னர், லீதான் முக்கிய அஸ்தஸ்தில் இருந்தார்.

சாம்சங் நிறுவன துணை தலைவர் மீண்டும் சிறையிலடைப்பு

தென்கொரியாவின் சட்டப்படி மூன்று ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை மட்டுமே ரத்து செய்யப்படவோ, குறைக்கப்படவோ வாய்ப்பிருகிறது. தண்டனைக்காலம் அதற்கு அதிகமாக இருந்தால் அந்த தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்.

ஏற்கனவே அவர் ஓராண்டு சிறையில் இருந்ததால், மேலும் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல் அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பதும், பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபரான லீ சிறையில் அடைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.