நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்… கோபத்தில் வெடிக்கும் ‘பூமி’ டைரக்டர்

 

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்… கோபத்தில் வெடிக்கும் ‘பூமி’ டைரக்டர்

விவசாயிகள் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்ட ‘பூமி’ படம் தற்போது விவசாயிகள் பிரச்சனை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ரிலீஸ் ஆனதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

சினிமாவில் சொல்லப்படாத கதை என்று லக்‌ஷ்மனும் பில்டப் கொடுத்திருந்ததால் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது.

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்… கோபத்தில் வெடிக்கும் ‘பூமி’ டைரக்டர்

விவசாயிகளுக்கு ஆதரவாக இப்படம் குரல் கொடுக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரான படம் என்றும், பிஜேபிக்கு ஆதரவான படம் என்றும் கடுமையான விமர்சனம் எழுந்து அதிர்ச்சி அளிக்கிறது.

விவசாயிகள் பிரச்சனை பற்றிய இப்படம் சரியான கள ஆய்வு இல்லாமல் எடுக்கப்பட்டுவிட்டதாக சொல்லி வருகின்றனர்.

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்… கோபத்தில் வெடிக்கும் ‘பூமி’ டைரக்டர்

ரோமியோ ஜூலியட், போகன் என்று ஏற்கனவே ஜெயம்ரவியை வைத்து இயக்கிய லஷ்மண் தான் இப்படத்தையும் ஜெயம் ரவியை வைத்தே இயக்கி இருந்தார். ஜெயம் ரவிக்கு இது 25வது படம் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பொய்த்திருக்கும் நிலையில்,

’’ நான் இதுவரை பார்த்த படங்களில் பூமி போன்று ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. சுறா, ஆழ்வார், அஞ்சான், ராஜபாட்டை வரிசையில் இந்த படம் அமைந்திருக்கிறது. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கவும்,

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்… கோபத்தில் வெடிக்கும் ‘பூமி’ டைரக்டர்

லக்ஸ்மணுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ’’சார், எதிர்கால தலைமுறை நல்லா இருக்கணும்னு நெனச்சுதான் இந்த படத்த எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். இல்லேன்னா, ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா என்ன? நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ… நீங்க சூப்பர்.. ஜெயிச்சிட்டீங்க ப்ரோ…நான் தோத்துட்டேன்.’’என்று பதிவிட்டிருக்கிறார்.

லக்ஸ்மனின் இந்த கோபம், தமிழ்திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.