குறை கேட்ட கனிமொழியை கேள்வி கேட்டு ஓடவைத்த தோவாளை பூ வியாபாரிகள்

 

குறை கேட்ட கனிமொழியை கேள்வி கேட்டு ஓடவைத்த தோவாளை பூ வியாபாரிகள்

திமுக ஆட்சிக்கு வந்தால் உங்க கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று குறைகளை கேட்ட கனிமொழியை துருவித்துருவி கேள்விகள் கேட்டு ஓட விட்டனர் தோவாளை பூ வியாபாரிகள்.

குறை கேட்ட கனிமொழியை கேள்வி கேட்டு ஓடவைத்த தோவாளை பூ வியாபாரிகள்

குமரி மாவட்டத்தின் தோவாளை மலர்சந்தை மிகவும் பிரபலமானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் தோவாளை மலர் சந்தைக்கு மலர்கள் வருவது வழக்கம். இந்த சந்தையில் இருந்துதான் கேரளாவுக்கும் மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் இருந்து இப்படி பிரபலமாக இருக்கும் மலர் சந்தையை திமுக ஆட்சியின்போது காவல்கிணறு பகுதிக்கு மாற்றப்படுவதாக கூறி, பல கோடியில் புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. வியாபாரிகள் அங்கு போக விரும்பாததால் அது இப்போதும் பயனற்று கிடக்கிறது.

குறை கேட்ட கனிமொழியை கேள்வி கேட்டு ஓடவைத்த தோவாளை பூ வியாபாரிகள்

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தோவாளை மலர் சந்தையிலேயே புதிய கட்டிடம் கட்டி கொடுத்தார்.

இந்நிலையில் , விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்திற்காக நேற்று தோவாளை மார்க்கெட் சென்று மலர் வியாபாரிகளை சந்தித்தார் கனிமொழி எம்.பி.

மலர் வியாபாரிகளிடம் தங்கள் குறைகளை கேட்ட கனிமொழியிடம், ‘’போனமுறையும் வந்து கோரிக்கை என்னன்னு கேட்டீங்க. இப்பவும் வர்றீங்க. எதுக்கு எங்களை தேடி வர்றீங்க? என்றதும்,

‘’திமுக ஆட்சிக்கு வந்தால் உங்க கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்று சொல்லவும்,

குறை கேட்ட கனிமொழியை கேள்வி கேட்டு ஓடவைத்த தோவாளை பூ வியாபாரிகள்

’’ஒழுங்காக பிழைப்பு நடத்திக்கிட்டு வந்தோம். இப்போதும் ஒழுங்காக பிழைப்பு நடத்திக்கிட்டு வர்ற்றோம். இடையில நீங்கதான் வேறு இடத்துக்கு மாத்துறதா சொல்லி எங்க பொழப்பை கெடுக்க நினைச்சீங்க. எங்க வியாபாரம் அடி வாங்கணும்னு அப்பாவு எம்.எல்.ஏ. முயற்சியில காவல் கிணறு ஏரியாவுல பூ மார்க்கெட் வந்துச்சு. அதுவும் இப்ப இல்ல. பூட்டி கெடக்குது. அதிமுகதான் எங்க கோரிக்கையை ஏற்று புதுசா கடை கட்டிகொடுத்துச்சு’’ என்று சொல்லவும் பேயறைந்தது மாதிரி ஆச்சு கனிமொழிக்கு.

தொடர்ந்து பலரும் அதையே சொல்லவும், போனமுறை வந்து குறைகேட்டு போனீங்களே… என்ன செஞ்சீங்க? என்று கேட்கவும், பிரச்சார வாகனத்தை நோக்கி ஓட்டமெடுத்தார் கனிமொழி.