சிதம்பரத்தில் வள்ளலார் பெருவிழா! தமிழின உணர்வாளர்கள் பங்கேற்க அழைப்பு

 

சிதம்பரத்தில் வள்ளலார் பெருவிழா!  தமிழின உணர்வாளர்கள்  பங்கேற்க அழைப்பு

சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளாருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், நாளை 20 அன்று “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் – வள்ளலார் பெருவிழா” – சிதம்பரத்தில் நடைபெறுகிறது.

சிதம்பரத்தில் வள்ளலார் பெருவிழா!  தமிழின உணர்வாளர்கள்  பங்கேற்க அழைப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கமும், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவமும் இணைந்து நடத்தும் இவ்விழா நாளை 20.01.2020 புதன் கிழமை மாலை 5 மணிக்கு சிதம்பரம் வட்டம் கீரப்பாளையம் செல்லியம்மன் கோயில் திடலில் நடைபெறுகிறது.

இவ்விழாவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார். கீரப்பாளையம் இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் த ஞான. சுந்தரபாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க பரதூர் செயலாளர் பொன்னிவளவன் வரவேற்புரை ஆற்றுகிறார். பிரேமா திருவருட்பா ஓதல், சிதம்பரம் தற்காப்பு பயிற்சிப் பள்ளி ஆசான் இரா. எல்லாளன் ஒருங்கிணைப்பில் மாணவர்களின் மல்லர்கம்பம் – சிலம்பம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

சிதம்பரத்தில் வள்ளலார் பெருவிழா!  தமிழின உணர்வாளர்கள்  பங்கேற்க அழைப்பு

வள்ளலார் வழியில் தொடர் தொண்டாற்றிவரும் அன்பர்களுக்கான “வள்ளலார் திருத்தொண்டர்” விருதை கீரப்பாளையம் தயவுத்திரு நா. நல்லதம்பி பெறுகிறார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே. சுப்ரமணிய சிவா நோக்க உரையாற்றுகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் விழா நிறைவுரையாற்றுகிறார்.

வள்ளலார் அன்பர்களும், தமிழின உணர்வாளர்களும் இவ்விழாவில், திரளாகப் பங்கேற்க வரும்படி தமிழ்த்தேசியப் பேரியக்கமும், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவமும் அன்புரிமையுடன் அழைத்திருக்கிறார்கள்.