அமித்ஷாவிடம் அதிருப்தியை தெரிவித்த முதல்வர்!

 

அமித்ஷாவிடம் அதிருப்தியை தெரிவித்த முதல்வர்!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். அமைச்சர் ஜெயக்குமாரும் முதல்வருடன் சென்றிருக்கிறார். தவிர, தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் முதல்வரின் செயலாளர்கள் சாய்குமர், செந்தில்குமாரும் சென்றிருக்கிறார்கள்.

அமித்ஷாவிடம் அதிருப்தியை தெரிவித்த முதல்வர்!

டெல்லி விமான நிலையத்தில் புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் என்.சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, நவநீதகிருஷ்ணன், ஏ.முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

பின்னர், டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஆலோசனைக்கு பின்னர் அமித்ஷாவை சந்தித்தார் முதல்வர்.

அரசு முறை பயணம் என்றாலும் அரசியல்தான் பிரதானமாக இருக்கிறது என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. கூட்டணி குறித்த பேச்சு நடத்தவே அவர் அமித்ஷா, மோடியை சந்திப்பதாகவும் தகவல் வருகிறது.

அமித்ஷாவிடம் அதிருப்தியை தெரிவித்த முதல்வர்!

நேற்று அமித்ஷாவை சந்தித்த முதல்வர் இன்றைக்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கிறார்.

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகும் நிலையில், அதிமுகவுக்கு உள்ளிருந்தே சசிக்கு ஆதரவாக குரல் எழுந்து வருகிறது என்றும், சசிகலாவை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் அமித்ஷாவிடம் சொல்லிவிட்டு, அதில் கொஞ்சம் கூட தனக்கு விருப்பமில்லை என்று அதிருப்தியை தெளிவுபடுத்தி இருக்கிறார் முதல்வர் என்கிறது பாஜக வட்டாரம்.

அமித்ஷாவிடம் அதிருப்தியை தெரிவித்த முதல்வர்!

மேலும், சசிகலாவுக்கு ஆதரவான எந்த ஒரு அரசியல் நடவடிக்கையினையும் எடுத்துவிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாராம்.