ஆன்லைனில் பொங்கல் சீர்- அசரவைத்த ஃபேஸ்புக் குழு

 

ஆன்லைனில் பொங்கல் சீர்- அசரவைத்த ஃபேஸ்புக் குழு

ஆன்லைன் கிளாஸ், ஆன்லைன் ஷாப்பிங் போல, ஆன்லைன் பொங்கல் சீர்வரிசை கொடுத்து அசத்தியுள்ளது ஒரு ஃபேஸ்புக் குழு. பொங்கல் பண்டிகையை என்றால், குடும்பத்தில் சகோதரி உறவு முறைகளுக்கு சீர் கொடுப்பது பண்பாடு சார்ந்த விஷயமாக தமிழர் கடைபிடித்து வருகின்றனர். அந்த பாரம்பரிய பழக்க வழக்கத்தை ஃபேஸ்புக் உறவுகளுக்கு நீட்டித்தால் என்ன என்கிற எண்ணத்தை உருவாக்கப்பட்ட குழு, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெற்றிகரமாக ஆன்லைன் சீர் வரிசைகளை கொடுத்து அசத்தியுள்ளது.

ஆன்லைனில் பொங்கல் சீர்- அசரவைத்த ஃபேஸ்புக் குழு

இந்த குழுவை ஒருங்கிணைத்த ஆனந்த ரேஷ்மியும் , ஜோதிபாசு ஆகியோர் இது தொடர்பாக விளக்குகையில்,பொதுவா சீர் செய்ற வழக்கம் நம்ம குடும்பத்தை தாய்மாமாவோ அல்லது அண்ணன் தம்பியோ தான் தங்களோட சகோதரிகளுக்கு செய்வாங்க. இது தொன்றுதொட்டு நமது பண்பாட்டு அம்சமாக இருக்கிறது. ஆனால், எந்த கட்டாயமும் இல்லாமம், நமக்கு முகம் தெரியாத ஒருத்தர், நமக்காக பாத்து பாத்து நமக்கு பிடிச்சத தேடி பிடிச்சு சீர் செஞ்சா எப்படி இருக்கும் ? இந்த கேள்வியில் தொடங்கியதுதான் ஃபேஸ்புக் பொங்க சீரு குரூப்.ஏற்கெனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கீக்ரெட் சாண்டா ( Secret Santa) என்கிற பெயரில் ஒரு பரிசு பரிமாற்ற விளையாட்டு வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் குழுவை தொடங்கிய அனுபவம்தான் , இந்த பொங்கசீரு குழுவுக்கு உற்சாகம் தந்தது.

ஆன்லைனில் பொங்கல் சீர்- அசரவைத்த ஃபேஸ்புக் குழு

பிடித்தவர்களுக்கு கிஃப்ட் என்று வழக்கமான விளையாட்டுகள் போல் இல்லாமல், ஒரு puzzle போல் வைத்து நம் விடையை பொறுத்து நமக்கான பொங்க சீரு நண்பர் தேர்வு செய்யப்பட்டது. நாம் ஒருவருக்கு பொங்க சீரு அனுப்ப, நமக்கு வேறொருவர் அனுப்புவார் என்பது விளையாட்டின் விதி. இந்த puzzle game விதிமுறை பங்கேற்பாளர்களுக்கு ரொம்பவே ஆர்வப்பட வைத்தது.

ஆன்லைனில் பொங்கல் சீர்- அசரவைத்த ஃபேஸ்புக் குழு

ஒவ்வொருத்தருக்கும் ஆள் பகிர்ந்து கொடுத்ததோட வேல முடிஞ்சது என்று இல்லாம, ஒவ்வொரு நாளும் கிப்ட் செலக்ட் பண்ணியாச்சா என்ன பண்ண போறீங்கன்னு கேட்டு உறுதி செய்வதும், அது சரியான விதத்துல எல்லாருக்கும் போய் சேர்றத உறுதி செய்வதுதான் பெரிய சவால்.

நமக்கு தேர்வு செய்யப்பட்ட நபரின் ப்ரொஃபைலில் வலம் வந்து அவருக்கு பிடித்த விஷயங்களை வாங்கி தருவது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம், முன்பின் அறியாத நபர்கள் தானே என்று ஏனாதானோ என்று பரிசுகளை தேர்ந்தெடுக்காமல், நட்பு வட்டம் காட்டிய ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஆச்சர்யமாக இருந்தது. பரிசுகள் அளவிலோ, தொகையிலோ சிறியதா, பெரியதா என்பதாக அல்லாமல், முகமறியா நட்பிற்கு பிடித்ததொரு பரிசு என்பதே பிரதானமாக இருந்தது. பொங்க சீரு ஃபேஸ்புக் குழு வெறும் விளையாட்டாக இல்லாமல், நட்புகள் பாத்து பாத்து தாய் வீட்டு சீதனம் மாதிரி மாத்தி மாத்தி பொங்க சீர் பரிமாறிக் கொண்டது புதிய அனுபவம்தான். வாழ்த்துகள் பொங்க சீரு குழுவுக்கு..