குருமூர்த்தியின் அந்த கனவும் பொய்யாச்சு…. வன்னி அரசு

 

குருமூர்த்தியின் அந்த கனவும் பொய்யாச்சு…. வன்னி அரசு

ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும் தங்களுக்கு வாய்ஸ் கொடுப்பார் என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர். ரஜினி கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி பாஜகவுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லி வந்தார். துக்ளக் குருமூர்த்தியும் ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்கிற ரீதியிலேயே பேசி வந்தார்.

குருமூர்த்தியின் அந்த கனவும் பொய்யாச்சு…. வன்னி அரசு

ஆனால், நேற்று ரஜினி மன்றத்தின் மூன்று மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். தலைமையிடம் கேட்டுத்தான் இந்த முடிவினை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்னும் பல நிர்வாகிகளூம் இதே மனநிலையில் இருப்பதை அறிந்து, ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் இன்று அவசர அறிக்கையினை வெளி்யிட்டார்.

அதில், ‘’ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்’’ என்றும்,

குருமூர்த்தியின் அந்த கனவும் பொய்யாச்சு…. வன்னி அரசு

‘’அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தனது டுவிட்டர் பக்கத்தில், ’’மன்றத்தைச்சார்ந்த மாவட்டச்செயலாளர்கள் பலர் நேற்று திமுகவில் இணைந்தனர். அந்த இணைப்பை வரவேற்று வழிமொழிந்த அறிக்கையே இது.
கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், பாஜகவைத்தான் ரஜினி ஆதரிப்பார் என தரகுவியாபாரிகள் குருமூர்த்தி, தமிழருவிமணியன் காத்திருந்தனர்.
அந்த கனவும் பொய்யாச்சு’’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.