மதுரையில் அசத்தல் திருமணம்: டிஜிட்டல் முறையில் மொய் வசூல்

 

மதுரையில் அசத்தல் திருமணம்: டிஜிட்டல் முறையில் மொய் வசூல்

திருமணத்திற்கு மொய் பணம் கொடுப்பவர்களின் விபரங்களை காகித நோட்டில் எழுதும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. ஆனாலும் கால மாற்றத்திற்கு தகுந்தமாதிரி, டெபிட் கார்டு மூலமாகவும் மொய் பணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுரையில் அசத்தல் திருமணம்: டிஜிட்டல் முறையில் மொய் வசூல்

போட்ட மொய் பணத்தை சிலர் போடவில்லை என்று சண்டை போடுவதால், சில இடங்களில் மொய் பணத்திற்கு கம்ப்யூட்டர் ரசீத் கொடுத்தும் அசத்தி வருகிறார்கள்.

நாளடைவில் மாற்றம் வேண்டாமா? அதனால்தான், டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூல் செய்திருக்கிறார்கள். மதுரையில் நடந்த திருமணத்தில்தான் இந்த புதிய முறை கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

மதுரையில் நேற்று நடந்த திருமண விழாவில், மணமக்கள் இருவரும் என்ஜினீயர்கள் என்பதால் டிஜிட்டல் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.

மதுரையில் அசத்தல் திருமணம்: டிஜிட்டல் முறையில் மொய் வசூல்

செல்போன் செயலியில் தங்களது வங்கிகணக்கை இணைத்து கியூஆர் கோடு உருவாக்கி, அதை திருமண அழைப்பிதழில் அச்சடித்து விட்டனர். கொரோனாவினால் திருமணத்திற்கு வர முடியாத பலரும் இந்த செயலி மூலம் மொய் பணம் செலுத்தி இருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.