2030-க்குள் இந்தியா பல்வேறு துறைகளில் தன்னிறைவு அடையும்: பியூஸ் தாக்கல் செய்த பட்ஜெட் என்ன சொல்கிறது?

 

2030-க்குள் இந்தியா பல்வேறு துறைகளில் தன்னிறைவு அடையும்: பியூஸ் தாக்கல் செய்த பட்ஜெட் என்ன சொல்கிறது?

இன்று நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

புதுடில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மருத்துவம், சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை பற்றி உரை நிகழ்த்தினார். இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி அமைச்சர், ராஷ்டிரபதி பவனிற்கு நேரில் சென்று குடியரசுத் தலைவரை  அழைப்பது வழக்கம். எனவே நேரில் சென்று தன்னுடைய அழைப்பை முன்வைத்தார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அமைந்திருக்கும் நிதி அமைச்சரவை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் குறித்த தகவல்கள் பின் வருமாறு

1. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் பண வீக்கம் 4.4 ஆக குறைந்துள்ளது. பணவீக்கத்தை குறைக்காமல் இருந்திருந்தால் செலவுகள் 35% அதிகரித்திருக்கும் என குறிப்பிட்டார்.

2. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். வங்கிகள் நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வாராக்கடன் 3 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது

3. ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள்.

4. மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைக்கப்படும்.

5. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பை 10% இல் இருந்து 14% மாக உயர்த்தப்படும்.

6. பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

7. கூடுதலாக 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் தரப்படும்.

8. பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு.

9. முத்ரா திட்டத்தின் கீழ் 70% பெணகள் பயனடைந்துள்ளனர்.

10. செல்போன் டேட்டா பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 15%க்கும் மேல் அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே செல்போன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

11. 5 ஆண்டுகளில் 34 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

12. ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு. தேசம் முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராசிங் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்துள்ளது.  வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே சேவைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

13. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

14. பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் ரூ. 1.03 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிவந்துள்ளது. ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

15. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியா பல்வேறு துறைகளில் தன்னிறைவு அடையும்

16. உங்களின் வரி கழிப்பறைகள் கட்டவும், இலவச கேஸ் இணைப்பு தரவும் உதவுகிறது. 50 கோடி மக்களின் மருத்துவ செலவிற்கு அது பயன்படுகிறது.

17.ஆயுஷ்மான் பாரத் எனும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, 15 கோடி மக்களுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

18. வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு. இதன் மூலம் 3 கோடி பேர் பயனடைவார்கள். டெபாசிட்டில் இருக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரிப்பிடித்தம் இல்லை.