உளவுத்துறைகளின் சர்வே சொல்வது என்ன? ஸ்டாலின்தான் அடுத்த முதல்வரா?

 

உளவுத்துறைகளின் சர்வே சொல்வது என்ன? ஸ்டாலின்தான் அடுத்த முதல்வரா?

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று மத்திய,மாநில உளவுத்துறைகளின் சர்வே மற்றும் தனியார் சர்வேக்கக்களிலும் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது திமுக.

உளவுத்துறைகளின் சர்வே சொல்வது என்ன? ஸ்டாலின்தான் அடுத்த முதல்வரா?

மு.க.ஸ்டாலின் என்றால் ‘மு’தல்வர் ‘க’னவு ஸ்டாலினாம். வார்த்தை விளையாட்டு என்ற பெயரில் தினமலம் இப்படி சில்லறை விளையாட்டை நடத்தி வருகிறது என்று ஆவேசப்படும் திமுகவின் முரசொலி, தினமலர் நாளிதழின் ‘நெம்பர் ஒன்’ விளம்பரம் குறித்தும் அவர்களது குடும்ப விவகாரம் குறித்தும் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இப்போது சாக்கடைத் தண்ணீரை பன்னீராக்கி தெளிக்கவும், அதையே கலக்கி குடிக்கவும் முடிவுக்கு வந்த ஜடங்கள் இவை என்றும், பத்திரிகா தர்மத்தை கூறுபோட்டு விற்க துணிந்துவிட்ட கூமுட்டைகள் இவை என்றும் கடுமையாக சாடியிருக்கிறது.

உளவுத்துறைகளின் சர்வே சொல்வது என்ன? ஸ்டாலின்தான் அடுத்த முதல்வரா?

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது என்பது அவரது கனவல்ல. கோடிக்கணக்கான மக்களின் கனவும் அது. திமுக தொண்டர்களின் கனவு என்றும்,

தமிழ்நாட்டில் வெளியான, வெளியிடக்கூடாது என்று மறைக்கப்பட்ட தனியார் எடுத்த சர்வேக்களாக இருந்தாலும் சரி, மத்திய அரசு உளவுத்துறை எடுத்த சர்வே ஆக இருந்தாலும் சரி, மாநில அரசு உளவுத்துறை எடுத்த சர்வே ஆக இருந்தாலும்சரி, அனைத்திலும் திமுகதான் வெல்லும்; மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் என்றுதான் வந்திருக்கிறது.

உளவுத்துறைகளின் சர்வே சொல்வது என்ன? ஸ்டாலின்தான் அடுத்த முதல்வரா?

எந்த சர்வேயாக இருந்தாலும், யார் எடுத்த சர்வேவாக இருந்தாலும் அப்படித்தான் வந்துள்ளது. அதனால் மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார் என்று சொல்வது தவறு. ஸ்டாலினை முதல்வராக்க தயாராக இருக்கிறது தமிழ்நாடு என்றும், இக்கனவு நிறைவேறுவதை யாரும் தடுக்க முடியாது. நரகல் கூட்டத்தின் ஆசை நிறைவேறாது என்றும் தெரிவித்திருக்கிறது அழுத்தமாக.