Home அரசியல் ரஜினி ரசிகர்களுக்கு தலைமை வழங்கிய அனுமதி

ரஜினி ரசிகர்களுக்கு தலைமை வழங்கிய அனுமதி

இப்போது இல்லேன்னா எப்பவும் இல்லை என்று ரஜினிதான் சொல்லி இருந்தார். அதனால், இப்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால் இனி எப்பவுமே அவர் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட அவரது மன்றத்து நிர்வாகிகள் பிரதனான கட்சிகள் இணைந்து தங்களது அரசியல் வாழ்க்கையை தொடங்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையும் அதற்கு அனுமதி அளித்துவிட்டது.

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு நேற்று திமுகவில் இணைந்தனர்.

தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாகவும், அரசியலில் ஈடுபட முடியாத சூழ்நிலை காரணமாகவும் நாங்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி, அரசியல் பணிக்காக திமுகவில் இணைந்திருக்கிறோம். ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஜோசப் ஸ்டாலின்.

அவர் மேலும், இன்னும் பல மாவட்ட நிர்வாகிகள் திமுகவிற்கு வரவிருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று சொல்லியிருக்கும் ஜோசப், தலைவர் ரஜினிகாந்த் எங்களிடம் ஆலோசித்தார். தன்னை நம்பி அரசியலுக்கு வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் சொல்கிற கருத்து நியாமானது. அதற்கு மாற்று கருத்து சொல்ல முடியாது. அதே நேரத்தில், திமுகவில் இணைவது சம்பந்தமாக தலைமையிடம் அனுமதி கேட்டோம். ’’உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் இணைந்து செயல்படலாம்’’ என்று அனுமதி அளித்துவிட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர் இன்று, ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் இணையலாம். மன்றத்து நிர்வாகிகள் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் இணையலாம். ஆனால், அவர் எப்போது ரஜினி ரசிகர்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது என்று அறிவித்துள்ளார் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

9 ஆண்களுக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள்: ஒரே குடும்பத்தினருக்கு ஏன் இந்த தண்டனை?

ஒன்பது ஆண்கள் தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டையையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது பீகார் நீதிமன்றம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நாடெங்கிலும் பரபரப்பை...

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாய் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பதுபோல...

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே நடந்த கொடுமை .

தனியே வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துப்பாக்கியை காமித்து பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
TopTamilNews