பன்றி ஜல்லிக்கட்டு – பரிசுகளை தட்டிச்சென்ற இளைஞர்கள்

 

பன்றி ஜல்லிக்கட்டு – பரிசுகளை தட்டிச்சென்ற இளைஞர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையிலும் மதுரையை சுற்றிலும் காளை மாடுகளுடன் விளையாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், தேனியில் பன்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

பன்றி ஜல்லிக்கட்டு – பரிசுகளை தட்டிச்சென்ற இளைஞர்கள்

ஏறுதழுவுதல் போல இது பன்றிதழுவுதல் போட்டி என்கிறார்கள். காளைகளை விடும் வாடிவாசல் போலவே பன்றி ஜல்லிக்கட்டிலும் வாடிவாசல் அமைத்து பன்றிகளை ஒவ்வொன்றாக மைதானத்திற்குள் விடுகிறார்கள். 70 கிலோ முதல் 100 கிலோ எடையுள்ள பன்றிகளை மட்டுமே போட்டியில் அனுமதிக்கிறார்கள்.

மாட்டின் திமிலை பிடித்து வெற்றிபெறுவது போல, இதில் பன்றியின் பின்னங்காலை பிடித்து நிறுத்த வேண்டும். மனிதர்கள் அருகே வந்தாலே தலை தெறிக்க ஓடும் பன்றிகள். அதுவே நாலாபுறமும் கூட்டம் நிற்க, அச்சத்தில் தெறித்து ஓடும்போது அதன் பின்னங்காலை பிடித்தால் ஆளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு ஓடும். அதையும் மீறி பலம் கொண்ட மட்டும் பிடித்து பன்றியை நிறுத்த வேண்டும்.

பன்றி ஜல்லிக்கட்டு – பரிசுகளை தட்டிச்சென்ற இளைஞர்கள்

பன்றி ஜல்லிக்கட்டில் ஏராளமான இளைஞர்கள் பரிசுகளை தட்டிச்சென்றார்கள்.

காளைஜல்லிகட்டில் இருப்பதுபோல இதில் உயிரிழப்புகளும், காயங்களும் இல்லை என்பது பெரும் ஆறுதல்தான்.

சங்க காலத்தில் விவசாய பணிகளுக்கு மாடுகளுக்கு பதிலாக பன்றிகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் முன்னோர்கள். அதை நினைவுகூரும் விதமாகத்தான் பன்றி ஜல்லிக்கட்டினை நடத்தி வருகிறார்கள் .