சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்?

 

சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் பி.ஏ.சரவணன் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார். திருவாடனையில் உள்ள
சரவணனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்?

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு சிறப்பு பெயர் வைத்து அழைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் விஜயபாஸ்கரை ‘குட்கா’விஜயபாஸ்கர்
என்றே சொல்லி பேசி வருகிறார். அந்த குட்கா விவகாரத்தில்தான் சரவணனை விசாரணைக்கு அழைத்து சென்றிருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

2013ம் ஆண்டிலிருந்தே தமிழக அரசு தடை போட்டுவிட்டாலும் 2016ஆண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்தது குட்கா. 2016ம் ஆண்டில் நடந்த அதிரடி
சோதனையில் மதுரவாயல் குடோனில் சிக்கிய குட்காவுடன், குட்கா வியாபாரி மாதவராவின் டைரியும் சிக்கியது. மாதவராவின் அந்த டைரி்யில் அதிகாரிகள்
முதல் அமைச்சர்கள் வரையிலும் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி
வந்தனர்.

சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்?

திமுக வழக்கு தொடுத்ததால் இந்த விசாரணை சிபிஐக்கு மாறியது. சிபிஐக்கு விசாரணை மாறியதுமே 2018ம் ஆண்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின்
உதவியாளர்கள் சரவணன், சீனிவாசனிடம் விசாரணை நடத்தினார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்தினார்கள் அதிகாரிகள். அதன் பின்னர் இந்த வழக்கில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அமைச்சர் உதவியாளர் சரவணன் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக வரும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.