‘2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி எனது குழந்தை பிறக்கும்’ நடிகை சமந்தாவின் வைரல் வீடியோ!

 

‘2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி எனது குழந்தை பிறக்கும்’ நடிகை சமந்தாவின் வைரல் வீடியோ!

பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த  2017 அன்று கோவாவில் நடந்தது.

விடாது துரத்தும் கர்ப்ப வதந்திகளுக்குப் பயந்துதான் த்ரிஷா, தமன்னா, நயன் ஆகியோர் திருமணம் செய்துகொள்ளவே பயப்படுகிறார்கள் போல. இதோ திருமணமாகி இரண்டு  ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து ‘கர்ப்பமாக இருக்கிறார்’ வதந்தைகளில் மாட்டித் தவிக்கிறார் நடிகை சமந்தா.

samantha

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா.தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த  2017 அன்று கோவாவில் நடந்தது.

samantha

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வரும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.  ஆனால் தற்போது எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று ரசிகர்கள் அவரிடம்  தொடர்ந்து கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலை 7 மணிக்கு எனது குழந்தை பிறக்கும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதை கண்ட சிலர் சிறப்பான பதில் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.