Home தொழில்நுட்பம் 2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள்: இஸ்ரோ தலைவர்

2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள்: இஸ்ரோ தலைவர்

டெல்லி: 2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படவுள்ளனர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள்: இஸ்ரோ தலைவர்

விண்வெளி ஆய்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் அடுத்த நடவடிக்கையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ககன்யான்என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படவுள்ளனர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ரூ.10,000 கோடி மதிப்பெட்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என குறிப்பிட்ட அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா அடையவுள்ளது எனவும் பெருமிதனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள்: இஸ்ரோ தலைவர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வார...

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும் – தெய்வத் தமிழ்ப் பேரவை -செயற்குழு கூட்ட தீர்மானம்

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, இறைநெறி இமயவன் தலைமை...
- Advertisment -
TopTamilNews