2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டின் பிரபலமான 15 சுற்றுலா தலங்களுக்கு போய்ட்டு வாங்க…. மோடி வேண்டுகோள்…..

 

2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டின் பிரபலமான 15 சுற்றுலா தலங்களுக்கு போய்ட்டு வாங்க…. மோடி வேண்டுகோள்…..

2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டின் பிரபலமான 15 சுற்றுலா தலங்களுக்கு போய்ட்டு வாங்க என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் வலியுறுத்தினார்.

2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டின் பிரபலமான 15 சுற்றுலா தலங்களுக்கு போய்ட்டு வாங்க…. மோடி வேண்டுகோள்…..

நம் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம், அரசு திட்டங்கள் முதல் காஷ்மீர் விவகாரம் வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பேமெண்ட்ஸ்

மோடியின் சுதந்திர தின உரையில்,  டிஜிட்டல் பேமெண்ட்ஸ் உள்பட 5 முக்கியமான கோரிக்கைகளை நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார். அவை பின்வருமாறு, அனைவரும் தொடர்ந்து டிஜிட்டல் பேமெண்ட்ஸ் சேவை பயன்படுத்துங்கள். டிஜிட்டல் பேமெண்ட்ஸ்க்கு ஆம் சொல்லுங்கள், ரொக்க பரிவர்த்தனைக்கு நோ சொல்லுங்கள். 

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும். இதனை செயல்படுத்தபடுவதற்கான திட்டம் சரியான நேரத்தில் வெளியாகும். மேலும் மேட் இன் இந்தியா பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துவது குறித்து நாம் சிந்தித்தால் கிராம பொருளாதாரமும், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையும் முன்னேற்றம் காணும்.

ஏராளமான இந்தியர்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடு செல்கிறார்கள். அதேசமயம் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை குறிப்பிடும் நோக்கில், 2022ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள பிரபலமான 15 சுற்றுலா தளங்களுக்கு செல்வது குறித்து நாம் சிந்திக்கலாம்.

மக்கள் தொகை வெடிப்பு (பெருக்கம்) குறித்து விவாதம் மற்றும் விழிப்புணர்வு இங்கு தேவை. நம் குழந்தைகளின் ஆர்வங்களுக்கு நாம் நியாயம் செய்ய முடியுமா? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 

ரசாயனம்

பூமி தாயை பாதுகாக்கும் நோக்கில் ரசாயன உரங்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என என்னுடைய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை செய்தாலே நீங்கள் பாரத தாய்க்கு செய்யும் சேவையாகும்.