2021 சட்டமன்றத்தில் நாம் …. விஜய் ரசிகர்களின் முயற்சி

 

2021 சட்டமன்றத்தில் நாம் …. விஜய் ரசிகர்களின் முயற்சி

நீங்க வாங்க தம்பி என்று ரஜினிகாந்த் விஜய்யினை அரசியலுக்கு அழைப்பது போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எங்கும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது, ‘தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா’ என்று போஸ்டர் மதுரை எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2021 சட்டமன்றத்தில் நாம் …. விஜய் ரசிகர்களின் முயற்சி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸுடன் நடிகர் விஜய் இருப்பது போல் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த போஸ்டரில், நேற்று ரசிகர் மன்றம்.. இன்று மக்கள் மன்றம்.. நாளை சட்டமன்றம்… 2026ல் முதல் கையெழுத்து என்று வாசகங்கள் உள்ளன.

அதனாவது 2021 தேர்தலில் விஜய் மன்றத்து சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் உ றுப்பினராக செல்வார் என்பதைத்தான் அப்படி சொல்கிறார்கள்.

30 வருசமா இப்படி சொல்லி சொல்லி உசுப்பேத்தியும் ரஜினி வந்தபாடில்லை. ஆனாலும் விஜய் வந்துவிடுவார் என்றே அவரது ரசிகர்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.