இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் மு.க.ஸ்டாலின்

 

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள வேட்பாளர்களிடம் திமுக சார்பில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது.திமுக தங்கள் கூட்டணி கட்சியான மதிமுக, விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று காலை நெல்லை, ராமநாதபுரம் ,தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. பிற்பகலில் திண்டுக்கல், தேனி ,விருதுநகர் ,சிவகங்கை மாவட்ட வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 6ஆம் தேதி வரை வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறுகிறது.