2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

 

2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

2021ம் ஆண்டுகான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த துணை நடிகருக்கான விருதினை நடிகர் டேனியல் கலுயா வென்றிருக்கிறார். ’யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா’ திரப்படத்தில் நடித்ததற்காக டெனியலுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

சிறந்த இயக்குனருக்கான விருதை சீனா பெண் இயக்குநர் க்ளோயி சாவ் வென்றார். ‘நோமேன்லேண்ட்’ திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இந்த விருதினை வென்றார்.

சிறந்த திரைக்கதைக்கான விருதை ’பிராமிசிங் யங் உமன்’ திரைப்படம் வென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைகாக விருது ‘ஃபாதர்’திரைப்படத்திற்கு கிடைத்தது.

சிறந்த ஆடை அலங்கார வடிவமைப்புக்காக விருதினை மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் படத்திற்காக ஆன் ராத் வென்றார்.

2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதினை டென்மார்க்கை சேர்ந்த ’அனதர் ரவுண்ட்’ படம் வென்றது.

சிறந்த சிகை மற்றும் ஒப்பனை அலங்காரத்திற்கான விருது செர்ஜியோ போபஸ் ரிவேரா, ஜமிகா வில்சன், மியா நில் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மூன்று பேரும் இணைந்து இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்.

அனிமேட்டட் குறும்படத்திற்கான விருது இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ படத்திற்கு கிடைத்திருக்கிறது.

’ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்’ படம், லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான விருதினை வென்றது.

’சோல்’திரைப்படம், முழு நீள அனிமேட்டட் திரைப்பட விருதினை வென்றது.

’சவுண்ட் ஆஃப் மெட்டல்’திரைப்படம் சிறந்த ஒலி அமைப்புக்கான விருதினை வென்றது.