என்ன அவசரம்?பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? திருமா கேள்வி

என்ன அவசரம்?பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? திருமா கேள்வி

என்ன அவசரம்?பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? இன்னும் மூன்றாவது கட்ட சோதனை முடியாமலேயே ஏன் கொவேக்சினை விநியோகம் செய்யவேண்டும்? ‘அந்த உண்மையைத் தெரிந்தே மருந்தை எடுத்துக் கொள்கிறோம் ‘ -என்று மக்களிடமே இசைவு உறுதிமொழி கேட்பது சரியா? இது பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? என்ற கேள்வியை எழுப்புகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

என்ன அவசரம்?பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? திருமா கேள்வி

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெறுகின்றன. 160 மையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்படுகிறது.

இந்நிலையில், டுவிட்டர் மூலமாக மேற்கண்ட கேள்விகளை எழுப்பி இருக்கும் திருமாவளவன், முன்னதாக அறிக்கையின் மூலமாகவும் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

‘கோவேக்சின்’ தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவுசெய்யாத நிலையில் உள்ளதால், அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த ஐயம் மருத்துவர்களாலும், அறிவியல் அறிஞர்களாலும் எழுப்பப்படுகின்றன. அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை மத்திய அரசு தரவில்லை.

என்ன அவசரம்?பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? திருமா கேள்வி

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அரசு தனது மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவ சங்கத்தினரும் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, அத்தகைய அய்யங்கள் ஏதும் எழுப்பப்படாத நிலையிலுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்கிறார் திருமாவளவன்.

என்ன அவசரம்?பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? திருமா கேள்வி

மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் முன்களப்பணியாளர்கள் யாருக்கேனும் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அது இதுவரை வழங்கப்படவில்லை.

அவ்வாறிருக்கும்போது முன்களப்பணியாளர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. எனவே, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் எவருக்கேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.